பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ** இலக்கியங்களில் இ ல் ல ள த மலர்ச்சியையா இந்த மறுமலர்ச்சிக்காரர்கள் கொண்டுவரப் போகிருர்கள்? பலர் நம் கருவூலங்களான பழந்தமிழ் நூல்களை வெறுக்கின்றனர்; அவற்றைத் தொடுவதும் இழிவு எனக் கருதுகின்றனர்; அத்தகையோர், கட்டுரைகளும் கதைகளும் பாட்டுக்களும் எழுதிக் குவிக்கின்றனர். அவையனைத்தும் மணமற்ற வெறும் காட்டுப் பூக்களே ஆகும். பழைய நூல்களில் ஊன்றிப் பயின்று தமிழ் மரபும் பண்பாடும் உள்ளத்தில் மலராவிடில், எழுத்திலும் பேச்சிலும் மறுமலர்ச்சி காண்பதருமை. காலப் போக்கிற்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்பத் தமிழ்நடை மலர வேண்டுவது வரவேற்கத் தக்கது. ஆயின் மரபும் ஒழுங்கும் தவறிப்போவது இயல்பில் அமைந்த அழகைச் சிதைப்பதாகும். அருமையாக எழுதக்கூடிய மறுமலர்ச்சி எழுத்தாளர் பலர் தமிழ் இலக்கியங்களிற் பயிற்சி யின்மையாலோ பயிற்சிக் குறைவினலோ சில இடங்களில் வழுக்கி வீழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் மனம் வைத்துத் தமிழ்நூற் பயிற்சி பெறின், அவர் தொண்டு சிறப்புறும். பழந்தமிழ் நூற் பயிற்சியுடைய புதுமை எழுத்தாளர்களே தமிழ்நாட்டுக்கு இப்பொழுது தேவையானவர்' என்று அடிகள் அடிக்கடி கூறுவது வழக்கம். அடக்கமுடைமை அடிகள் மும்மொழிப் புலவர்: முற்றுந் துறந்த பெரியார் எனினும், அவர் தமக்குத் தமிழறிவை ஊட்டிய ஆசிரியர் களிடம் இறுதி நாள்வரை பேரன்புடனும் மரியாதையுடனும் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. செருக்குற்று, மற்றவரை இழிவாகக் கருதும் மனப்பான்மை அடிகளிடம் இருந்ததில்லை. கற்ருர் கல்லார், முதியவர் இளைஞர், வறியவர் செல்வர் ஆக அனைவரிடத்தும் இனிய முகத்துடன் பேசிப் பழகுதல் அவர் இயல்பு. பிறரை ஊக்குவிக்கும் பண்பு பலர் தம் போன்ற புலவரைக் காணின் பொருமை கொண்டு அவர் முற்போக்கிற்கு ஊறு செய்தல் இயல்பு. ஆயின், சங்கப் புலவர்கள் ஒருவரையொருவர் பாராட்டியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/167&oldid=881059" இலிருந்து மீள்விக்கப்பட்டது