பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 இடமும் பொருள்களின் அமைப்பும் எடுத்துக்காட்டாகப் போதுமான அறைகளையுடைய ஒரு கடுத்தரமான வீட்டில் உள்ளவர்கள், படித்த நாகரிக வாழ்க்கையிலுள்ளவர்களுடன் பழகு கி ன் ற வர் க ள் என வைத்துக் கொள்வோம். அவர்களுக்குத் தங்கள் நண்பர் வந்தால் அவர்களுடன் உட்கார்ந்து அளவளாவ ஒரு நல்ல அறை வேண்டும். அங்கே உட்காருவதற்கு ஓர் அழகான கட்டிலை வைத்திருந்தால் அது கலையன்று. தங்கள் தகுதிக்கு ஏற்பச் சில நாற்காலிகள், அவற்ருேடு பொருந்தும் ஒரு சிறிய வட்ட மேசை, மேசையின்மீது விரிப்பு, அழகிய பூக்களைத் தாங்கி கிற்கும் ஒரு சிறிய செம்பு இவற்றை அமைக்கும் முறையில் அமைப்பதிலே கலை காணப்படும். பல நிறப் பூக்களை எடுத்துச் செம்பிலே தண்ணிர்விட்டு வைத்துவிட்டால் கலை அங்கே காணப்படுவதில்லை. செம்பின் தோற்றம், பூக்களின் தோற்றம் இரண்டிற்கும் பொருத்தம் காணப்படவேண்டும். ஒடுங்கி நீண்ட பூச்செம்பில் பருத்துத் திரட்சியாகக் காணப்படும் மலர்களைக் குட்டையான தண்டு களுடன் வைத்தால் பொருந்தி நிற்கமாட்டா. அதுபோலவே, பருத்து விரிந்த செம்பில் நீண்ட தண்டுகளையுடைய மெல்லிய அல்லிபோன்ற மலர்களை இட்டு வைத்தால் பொருந்தாது. நிறங்களையும் பார்த்தே அமைத்தல் வேண்டும். ஆகவே, கலை என்பது பொருள்கள் ஒன்ருேடொன்று பொருந்தும் கிலேயிலே தான் காணப்படும். மாலை நேரம் என்ருல் மதியமும் மலர் களும் தென்றலும் எவ்வாறு பொருந்தி வருகின்றனவோ அமாவாசை என்ருல் நள்ளிரவு, இடியின் முழக்கம், மின்னலின் பிளவு ஆகியவை எவ்வாறு பொருந்தி நிற்கின்றனவோ, அவ்வாறு அறையின் அளவுத் தேர்வு, அமைப்பு, பொருள் களின் தேர்வு முதலியவை பொருந்தி இருக்கவேண்டும். படிக்கும் அறை நண்பர்களுடன் கூடிப் பேசும் அறையைத் தவிர வேறு பல அறைகள் தனித்தனி உபயோகத்திற்காக வீட்டில் இருந்தால், அந்தந்த அறையிலும் கலை பொலிவுறும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/174&oldid=881080" இலிருந்து மீள்விக்கப்பட்டது