பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 செய்ய வேண்டும். வீட்டிலே படிக்கும் அறை ஒன்று இருக்கிறது. அதிலே கண்ணைக் கவரும் நூல்கள் கிரம்ப உள. அழகிய விளக்கு உண்டு. மேலே மின்சாரக் காற்ருடி யுண்டு. இவ்வளவு பொருள்கள் இருந்து விட்டால் கலை உண்டு என்று சொல்ல முடியுமா ? அந்த அறையினுட் செல்லும் ஒருவருக்கு உட்கார்ந்து புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்னும் உணர்ச்சி உண்டாகும் நிலையில் அந்த அறையின் பொருள்களை அமைத் திருக்க வேண்டும். விளக்கு, படிப்பதற்குப் போதுமான ஒளியை உடையதாக இருக்க வேண்டும். நடுவிலே அழகிய மேசை, சுற்றிலும் நாற்காலிகள் வேண்டும். விரிப்புகளோ, பூச்செம்புகளோ அத்துணை அவசியமில்லை. இங்கேயும் கலையைக் காண வேண்டும். எங்கே என்ருல் அலமாரியில், அலமாரிகளை அமைத்திருக்கும் நிலையில், அதில் நூல்களை ஒழுங்காக அழகாக முறை தவருமல் அடுக்கியிருக்கும் அந்தத் தகுதியில் கலையைக் காணலாம். வீடு சிறிதாக இருக்குமேயானல், கலையழகு குன்ருத வண்ணம் அதையே அலுவலக வேலைகளைச் .ெ ச ய் யு ம் ஓர் இடமாகவும் கொள்ளலாம். கலையழகு அதனல் குன்றி விடுவதில்லை. வைத்திருக்கும் முறை சரியானதாக இருக்கவேண்டும். படுக்கை அறை படுக்கையறை ஒவ்வொரு வீட்டிற்கும் இன்றியமை யாதது. நல்ல காற்ருேட்டமுள்ள அறைகளே தேர்ந்தெடுக் கப்படவேண்டும். அங்கே கட்டில் உபயோகப்படுமாளுல் அதனடியில் பெட்டியோ பிற பொருள்களோ வைக்கப்படக் கூடாது. ஒரு சிறிய உடுப்பு மேசை, உடுப்பு அலமாரி, அவசியமால்ை உட்கார்ந்து படிக்க ஒரு சாய்வு நாற்காலி, அதற்கென ஒரு மேசை விளக்கு இவ்வளவு பொருள்கள் இருந்தால் செளகரியம். அங்கேயும் அவற்றைப் பயன் படுத்தும் முறையில் கலையைக் காணலாம். படுக்கை விரிப்பில், தலையணை உறையில், கொசுவலையில் கலையுள்ளம் வெளிப்படுவதைக் காணலாம். ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/175&oldid=881082" இலிருந்து மீள்விக்கப்பட்டது