பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கிலையில் இருக்க வேண்டும். சமையலறையிலே ஒரு மூலையிலே ஒரு சிறிய தண்ணிர்க் குழாய், அதன் நீர் உள்ளே . தெறித்து விழாத நிலையில் ஒரு சிறிய தொட்டி, இவற்றை வைத்திருப்பது மிகவும் நல்லது. அம்மி, மாவாட்டும் கல் இவ்வளவையும் சமையலறையிலே வைத்துக்கொள்ளக் கூடிய அளவில் அறை பெரிதாக இருப்பது நல்லது. ஒரு பெண்ணின் கலைத்திறன் கலையுணர்ச்சி முழுவதும் அவள் சமையலறையில் தான் விளங்க வேண்டும். பொருள்களை வைக்கும் அறை சமையலறையில் மட்டுமன்று; அதனை அடுத்துள்ள பொருள்களைத் திரட்டி வைக்கும் அறையை மிகவும் தூயதாக வைத்திருப்பதிலும், .ெ ப ா ரு ள் க ளை வைத்திருப்பதிலும், பொருள்களை வைத்திருக்கும் பாண்டங்களை அடுக்கி வைத் திருக்கும் எளிய முறையிலும் கலை இருக்கத்தான் செய்கிறது. பொருள்களை வைக்கும் பாண்டங்கள் கூடிய மட்டும் ஒரே வகைப் பொருள்களாகவும் ஒரே விதமான வேலைப்பாடுள்ளவை யாகவும் அ ைம ங் தி ரு ந் தா ல், அதில் ஒரு தனிக் கலை காணப்படும். வீட்டின் சுற்றுப்புறம் வீட்டைச் சுற்றியுள்ள பாகங்களுக்குச் சென்ருல், அங்கேதான் கலை தன் உயர்நிலையில் விளங்க வேண்டும், சுற்றுப்புற அமைப்பு பிறரைக் கவரக்கூடிய நிலையில் இருக்கும் பொழுது கலை அங்கே காணப்படுகிறது. - தோட்டத்தை எடுத்துக்கொள்வோம். பூந்தோட்டம் அமைப்பதிலும் கலையைக் காணலாம். வீட்டின் முன்பக்கம் பூந்தோட்டம்; பின்பக்கம் காய்கறித் தோட்டம் என அமைக்க வேண்டும். தோட்டம் என்ருல் .ெ ச டி க ளே நட்டுப் பயிராக்குதல் என்று கொள்ள முடியாது. அவற்றை வரிசைப் படுத்தி அமைப்பதில்தான் கலை இருக்கிறது. தரையில் வைக்க வேண்டிய செடிகளைத் தோற்றம், நிறம் முதலியவை களுக்கேற்ப ஒழுங்குபடுத்தி கட்டுவிட்டுத் தொட்டிகளில் வைக்கவேண்டிய செடிகளைத் தொட்டிகளில் நட்டுவைத்தலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/177&oldid=881086" இலிருந்து மீள்விக்கப்பட்டது