பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 தனிக் கலை காணப்படுகிறது. மேலும், பாத்திகளின் இரு கரைகளிலும் குட்டையாக வெட்டிவிடக் கூடிய செடிகளை வைத்து அவற்றை அழகாக வெட்டி விடுவதில் கலை காணப் படுகிறது. பின்னிப் பின்னி அடர்ந்து வளர்ந்து ஒழுங்கற்று கிற்கும் செடிகளை எவ்வளவு அழகான முறையில் வெட்டி வளர்க்கிருர்கள் என்பதைத் திருவனந்தபுரம், பெங்களுர், நீலகிரி, கோடைக்கானல், கொழும்பு, டெல்லி போன்ற இடங்கட்குச் சென்று பார்த்தால் நன்கு தெரியும். விடும் இலக்கியமும் இவ்வாறு விட்டின் பல பகுதிகளையும் பலவிதமாக வைத்திருப்பதால் எந்த விதமான கலையைக் காண்கிருேம் ? அங்கே காவியத்திற் காணும் கலை, ஓவியத்தில் ஒருங் கலை ஆகிய பல கலைகளைக் காண்கிருேம். வீட்டை அமைக்கும் முறையில், வீட்டில் பொருள்களை அமைக்கும் முறையில் கலையுள்ளத்தின் கற்பனைத்திறன் காணப்படுகிறது. இலக்கி யத்திற் காணப்படும் கலையின் தோற்றமும், வீட்டின் பொருள் களை அமைக்கும் முறையில் காணப்படும் கலையின் தோற்றமும் ஒன்றே. கலேயைப் பெருக்குதல் கலை உணர்ச்சியைத் தோற்றுவிக்கப் புதிதாகப் பொருள் களை உண்டாக்க வேண்டியதில்லை. இறைவன் படைத்த எல்லாப் பொருள்களிலும் கலை உண்டு. அறிவுள்ள பொருள் களிலே கலையுடனே கலையுணர்ச்சியும் உண்டு. ஆகவே அக்கலையுணர்ச்சியை எழுப்பி விடுவதின்வழி கலையைப் பெருக்க வேண்டும். எவ்வாறு எனில், கலையின் பொலிவு நிறைந்த இடங்களைப் பார்க்க நேரிடுவதால் கலையுணர்ச்சி தூண்டப்படுகிறது. பலரோடு பழகுவதால் ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சோம்பலும் சோர்வும் நீங்கி உழைப்பும் ஊக்கமும் ஏற்படும்போது தொழில் உள்ளம் ஈடுபடுகிறது. தொழில் சிறக்கும் நிலையில் கலை ஏற்படுகிறது. மகளிர் பொறுப்பு விட்டில் உள்ள மகளிர், வேலைக்காரர்கள் கையில் எல்லாப் பொறுப்பையும் ஒப்புவித்துவிட்டுக் கவலையின்றி - த-சோ-23 ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/178&oldid=881088" இலிருந்து மீள்விக்கப்பட்டது