பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. வள்ளல் அழகப்பர் புலவர் திரு. முத்து. சம்பந்தன் ள்ெளல் யார்? இம்மைச் செய்தன மறுமைக்குப் பயன் நல்கும் என்னும் வணிக ேநா க் கி ன் றி, இன்ன பொழுதில் ஈதல் - இன்னவர்க்குக் கொடுத்தல்-இவ்வளவே நல்கல் என்னும் வரையறையின்றிச் செல்வத்துப் பயனே ஈதல் என்ற குறிக் கோளுடன் ஒப்புரவு செய்தொழுகும் உள்ளங் கொண்ட பெருங்தகையோர்தாம் வள்ளல் என உலகினராற் போற்றிப் புகழத்தக்காராவர். இத்தகைய உள்ளப் பாங்குடைய பெருமக்கள் பலர், பண்டை நாளில் கந்தமிழகத்தே வாழ்ந்து வந்தனர். அப்பரம்பரை இடையீடுபட்டுப்போகா வண்ணங் தோன்றியவரே நம் அழகப்பர். பிறப்பும் இளமையும் அலைகடலோடியும் அ ரு ம் .ெ ப ா ரு ள் தேடுதல் நம் முந்தையோர் கண்ட நெறிமுறையாகும். அந்நெறிமுறையின் வழுவாது, அஞ்சாது, பண்டைநாள் தொட்டு இன்றுகாறும், கடல்கடந்து, இலங்கை, மலேயா முதலிய வெளிநாடுகளுக்குச் சென்று, பொருளீட்டிவருங் தொழிலைச் செட்டிகாட்டு மக்கள் மேற்கொண்டுள்ளனர். அச்செட்டிமார் நாட்டிலுள்ள கோட்டையூர் என்னும் சிற்றுார்தான் அழகப்பரை நாட்டுக்கு ஈந்து பெரும்புகழ் கொள்வதாயிற்று. இராமங்ாதன் செட்டியார் என்ற திருவுடையாரும் உமையாள் என்ற திருவாட்டியும். ஆற்றிய அருந்தவப்பயனல் 6-4-1909இல் அழகப்பர் தோன்றினர். ish * இவர், இளமைப் பருவத்திலேயே கல்விச் செல்வத்தில் ஈடுபாடுகொண்டவராய் விளங்கினர். ஆதலின், தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலுங் கல்வி பயிலுங்கால் தலைமாளுக்கராக விளங்கி, ஆசிரியர்கள் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்தார். நல்லொழுக்கம், கடமையுணர்வு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/180&oldid=881094" இலிருந்து மீள்விக்கப்பட்டது