பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மடியின்மை முதலிய நற்பண்புகட்கு கி லை க் க ள ளு க கின்றிலங்கினர். மலேயாச் செலவு H அழகப்பர். 1925ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிற் பயின்று கொண்டிருந்தார். எதிர்பாராவகையில் மலேயாவில் இருந்து அவருடைய தந்தையார் ஒரஞ்சல் எழுதியிருந்தார். உடனே மலேயாவிற்குப் புறப்பட்டு வருமாறு எழுதப்பட்டு இருந்தது. அவ்வஞ்சலில், கல்வியிற் பெருவிருப்புடையராய் இருந்த அழகப்பருக்கு மலேயாப் பயணத்தில் நாட்டஞ்செல்ல வில்லை. ஆயினும் தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’ யாதலின், தந்தையாரின் ஆணையைத் தலைமேற்கொண்டு, சென்னைத் துறைமுகத்தில் கப்பலேறினர். கடலில் அலை யெழுவதுபோல் அவருடைய நெஞ்சத்திலும் எண்ண அலைகள் மாறிமாறித் தோன்றின. கல்வியைக் கைவிட நேரிட்டதே எனக் கவன் ருர். உள்ளம் பலவாறு எண்ணி யெண்ணி உழன்றமையால் வெப்பம் மீதுார உடல் நலங்குன்றியது. கடுங் காய்ச்சலுக்காளாகினர். அவர் உடல்நிலையைக் கண்ட கப்பற்றலைவர், நாகப்பட்டினத் துறைமுகத்தில் அழகப்பரை இறக்கிவிட்டார். கல்வி கற்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டது என்ற களிப்பால், அழகப்பர் காய்ச்சலுக்கு நன்றி கூறினர். பின்னர், அவருடைய கல்வி தொடர்ந்தது. கல்வி முன்னேற்றம் அழகப்பர் பள்ளியிறுதிவகுப்பில் தேர்ச்சிபெற்றுக் கல்லூரியில் இடைநிலை (Intermediate) வகுப்பிலும் முதல்வராகத் தேர்ச்சி பெற்ருர். மேலும் பயின்று முன்னேற எண்ணங்கொண்ட அழகப்பர் பெற்ருேரைப் பிரிந்துழலும் துயரநிலைக்காளானர். அங்கிலையில் அழகப்பருக்கு உற்ருரும் உறவினரும் மற்ருரும் உதவ முன்வந்திலர். எண்ணங் திண்ணியராகப்பெற்ற அவர், இன்பம் விழைந்திலராய், இடும்பை இயல்பென்று கினைந்து, கல்லூரிக் கல்வியைத் தொடர்ந்து பயில முற்பட்டார். குன்ரு ஆர்வமும் குறைவிலா உழைப்பும் அவரைக் கைவிடவில்லை. முதுகலைப் (M. A.) பட்டத்திற்கு உரியராகித் திகழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/181&oldid=881097" இலிருந்து மீள்விக்கப்பட்டது