பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அ.தே போல் அழகப்பர்க்கு நேர்ந்த இடுக்கணும் நொய்தா யிற்று. ஊக்கத்தை முதலாகக் கொண்டு, கேரள மாநிலத்தில் புதுக்காடு என்னும் சிற்றுாரில் காடு மேடாகக் கிடந்த நிலத்தை விலைக்குப் பெற்று, அங்கே அழகப்பா நூற்பாலே என்னும் பெயரில் ஆலையொன்று நிறுவினர். அதனைச் சுற்றி வீடுகள் பலவுங் கட்டுவித்து, அழகப்பா நகர்’ ஆக்கினர். அசைவிலா ஊக்கமுடைய அவரை, ஆக்கம் அதர் வினவிக் கொண்டு சென்றடைந்தது. ■ H كم o கல்விக் கொடை அழகப்பர் ஆலைத் தொழிலால் அளக்கலாகாப் பொருட் பேறு பெற்ருரெனினும் மக்கள் மனப்பாங்கை அளந்தறியும் வாய்ப்பினையும் மிகுதியாகப் பெற்ருர் இரக்க மனம், அரக்க மனம் என இருவகை மனங்களையும் கண்டுணர்ந்தார். வலியோர், மெலியோர் என இருவகை மாந்தர், சமுதாயத்தில் நடமாடி வருதலையும், மெலியோர் வலியோர்க்குப் பலியா வதையும் கண்டு கண்டு, மனம் நொந்தார். இவற்றிற் கெல்லாம் அடிப்படைக் காரணம் கல்வியின்மையே எனத் தெளிந்தார். இத்தெளிவு அவர்க்கோர் மனவெழுச்சியை உண்டாக்கியது. சத்திரஞ்சாவடி கட்டுவதினும் கோவில் கோபுரம் எழுப்புவதினும் கல்வி வளர்ப்பதுவே சாலச்சிறந்த கடமையாகும் என்னுங் கருத்து அவருள்ளத்தே வேரூன்றியது. ஈட்டும் பொருளால் நாட்டில் கல்வி வளர்த்துப் பெரும்புகழை நிலைநாட்ட வேண்டும் என்பது, அவர்தம் உள்ளக் கிடக்கை யாகியது H ■ சென்னை மாநிலத்தில் கலைக்கல்லூரிகள் இல்லாக் குறையை நிறைவு செய்யப் பணம் படைத்த நல்லறிவாளர் முன் வருதல் வேண்டும்; நூருயிரம் வெண்பொற் காசுகள் கொடுப்பின் கல்லூரி தோற்றுவிக்கலாம். இதனைச் செய்தோர் சிறந்த அறஞ் செய்தோராவர்' என்னும் பொருளுரையைச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஆ. இலக்குமணசாமி முதலியார், 1947 இல் சென்னை அடையாற்றில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் சொற்பெருக் காற்றுகையில் குறிப்பிட்டார். அவ் வ ம ய ம் அங்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/183&oldid=881099" இலிருந்து மீள்விக்கப்பட்டது