பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 சென்றிருந்த அழகப்பர், இதனைச் செவியேற்று, மனமகிழ்ந்து, தம் உள்ளக் கிடக்கை உருவாகுங் காலம் வந்துவிட்டதென நினைந்து, அத்தொகைக்குரிய காசோலை (செக்) ஒன்றைத் தந்து ஆவனபுரியுமாறு வேண்டிக்கொண்டார். கtலக் கோவில்களின் தோற்றம் பின்னர், காரைக்குடியிலும் புதுக்காட்டிலும் கல்வி நிலையங்கள் தொடர்ந்து தோன்றலாயின. 1947இல் காரைக் குடியில் கலைக்கல்லூரியைத் தோற்றுவித்த அழகப்பர், இறுதிவரை ஆண்டுக்காண்டு புதுப்புதுக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் தோற்றுவித்த வண்ணமாகவே விளங்கினர். தொழிலில் அவருக்குக் கிடைத்த ஊதியமெல் லாம் நாட்டிற்குக் கிடைத்த நன்மையாகவே முடிந்தது. மாண்டிசோரிப் பள்ளி, ஆதாரப் பள்ளி, தொடக்கப் பள்ளி, மாதிரி உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியற் கல்லூரி, தொழில் நுணுக்கக் கல்லூரி, உடற் கல்வி கல்லூரி, மகளிர் கல்லூரி முதலிய கலைக்கோவில்களைக் காரைக்குடியில் கட்டி முடித்தார். காரைக்குடியில், மின் grgrusor oils, 51%bulb (Electro Chemical Research Institute) நிறுவுவதற்குப் பெருமுயற்சி செய்ததுடன், 120 ஹெக்டேர் (300 ஏக்கர்) நிலமும் 15 இலட்சம் வெண் பொன்னும் வழங்கினர். இவை தவிரத் தமிழகத்தும், அண்டை மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்கட்கும், உயர்நிலைப்பள்ளிகட்கும், ஆய்வுக் கூடங்கட்கும், கில ஆராய்ச்சித்துறைகட்கும், நூல்வெளியீடு, புயலுதவி, பள்ளிப் பகலுணவு முதலிய அறப்பணிகட்கும் அழகப்பர் வாரி வாரி வழங்கிய நன்கொடைகள் அளப்பரியன: வியக்கத்தக்கன, கல்விக்காகக் கொடுத்துக் கொடைவெற்றி கண்டவர். கிலேயாமையை நன்குணர்ந்த அழகப்பர், வந்தன வெல்லாம் வழங்கி வழங்கி கிலேத்த புகழுக்குரியவரானர். விருதுகள் அழகப்பர் காட்டிற்காகச் செய்த அளப்பரிய அறப்பணி களைக் கண்டு மகிழ்ந்து, பாராட்டக் கருதிய சென்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/184&oldid=881100" இலிருந்து மீள்விக்கப்பட்டது