பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் உள்ளமெனு மொருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையுங் கொடுநோய்க்கே ஈந்தா னங்தோ ! வெள்ளமென வருகிதியம் வாழும் வீடு வினைமுயற்சி யத்தனையுங் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும் உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான்.” அருஞ்சொற்பொருள் : ஒப்புரவு - உதவி; இடையீடு - இடைவெளி: ஈந்து - கொடுத்து, மடியின்மை - சோம்பலின்மை; நிலைக்களன் - இருப்பிடம்; நாட்டம்எண்ணம்; மீதுார - மிகுதியாக, இடும்பை - துன்பம்; உய்க்கவும் - செலுத்தவும்; வலவன் - ஒட்டி (Pilot), நறவு - தேன், ஊறு-துன்பம்; அற்றகுளம் - நீரற்றகுளம்; மடுத்தவாய் - பொருந்திய இடம், பகடு - காளை, பிறக்கிடுதல்-தோற்ருேடுதல்; நொய்தாயிற்று - மெலிதாயிற்று; அதர் - வழி. - வினுக்கள் : 1. வள்ளல் யார் ? - 2. அழகப்பரின் பிறப்பும் இளமையும்பற்றிப் பதினைந்து வரிகளில் எழுதுக. 3. அழகப்பரின் மலேயாச் செலவு பற்றிக் குறிப்பிடுக. 4. அழகப்பரின் கல்வி முன்னேற்றத்தைப் பற்றிப் பதினேந்து வரிகளில் எழுதுக. 5. அழகப்பரின் தொழில் முயற்சியைப் பற்றிப் பதினைந்து வரிகளில் எழுதுக. 6. அழகப்பரின் கல்விக்கொடையைப் பற்றிப் ப தி னை ந் து வரிகளில் எழுதுக. 7. அழகப்பர் ஏற்படுத்திய கலைக்கோயில்கள் எவை? அவரின் பொருட்கொடைக்குச் சில எடுத்துக்காட்டுக்கள் தருக. 8. அழகப்பர் பெற்ற விருதுகள் எவை? 9. அழகப்பரின் சிறப்பியல்புகளை 15 வரிகளில் எழுதுக. 10. அழகப்பரின் ஈகையைப் புலப்படுத்தும் கவியரசு முடியரசன் அவர்களின் பாடற்கருத்தை எழுதுக. த-சோ-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/186&oldid=881104" இலிருந்து மீள்விக்கப்பட்டது