பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இளவரசனுக்கு வித் துவாள் கா. சு. அன்புள்ள் அரசு, o உன் கடிதம் பெற்றேன். மகிழ்ச்சி. அரையாண்டுத் தேர்விற் பெற்ற மதிப்பெண்களைக் குறித்துள்ளாய். காலாண் டுத் தேர்வைவிடக் குறைந்துளவே காரணம் என்ன? படிப்பில் முயற்சி குறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது உன் கடிதம். தேர்வில் வெற்றி .ெ ப று வ த ற் கு ரி ய மதிப்பெண்கள் பெற்ருற் போதும் என்ற எண்ணம் மட்டுங் கூடாது. வகுப்பில், பள்ளியில் முதல்வகைத் திகழவேண்டும் என்ற எண்ணந்தான் வேண்டப்படுவது. அதற்கேற்ற முறையில் முயன்று, நன்கு பயின்று, ஆண்டுத் தேர்வில் முதல்வகை வெற்றிபெற விழைவு கொள். உன் கடிதத்தில் இன்னும் எழுத்துப் பிழைகள் உள்ளன. இன்னுஞ் சிறிது அக்கறை கொள்வையாயின் பிழையின்றியே எழுதி விடலாம். எவ்வளவு படித்துப் பட்டம் பெற்ருலும் பிழைபட எழுதுவோர் நன்கு மதிக்கப்படார். அதனல் பிழை நீக்கி எழுதப் பழகு; பழகி வெற்றி பெறு. பி ைழ ப ட எழுதுவது மொழிக்குச் செய்யும் பெருந்தீங்காகும். உன் தாய்மொழிக்குத் தீங்கு செய்ய எண்ணுதே. அலுவல் மிகுதியால் இரண்டு திங்களாக உனக்கு அறிவுரைகள் எழுதாமலேயே கடிதங்கள் எழுதி விட்டேன். இன்று ஓய்வு கிடைத்தமையால் மீண்டுஞ் சில அறிவுரைகள் எழுதுகின்றேன். நான் எழுதுவது வெறும் உபதேசமாகப் போய்விடக் கூடாது. உன் வாழ்க்கையில் அவற்றைக் கைக்கொண்டு நடக்கவேண்டும். ஏனெனில் நீ எப்பொழுதும் மாணவப் பருவத்திலேயே இருப்பவன் அல்லை. வருங்காலத் தில் இந்நாட்டு மக்களில் ஒருவன். நீ ஒழுக்கமுடையவகை இருந்தால் உன் நாடும் நல்ல நாடாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/187&oldid=881106" இலிருந்து மீள்விக்கப்பட்டது