பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 வகைகளாகப் பிரிக்கலாம். குடும்பத்தை நடத்த இன்றி யமையாது வேண்டப்படும் உணவு, உடை முதலியவற்றை வாங்குவதற்காகத் தேவைப்படுவது உடனடித் தேவை யாகும். பள்ளி திறந்தவுடன் பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்கள் வாங்குதல், திருமண இன்பச் செலவு இவை சேய்மைத்தேவை என்றும், எதிர்பாராது நேர்ந்த நோய், விபத்து காரணமாக ஏற்படும் அவசரமான செலவுபோன்றவை எதிர்பாராத செலவு என்றும் கூறப்படுகிறது. விஷம்போல் ஏறும் விலைவாசியினுல் மாதந்தோறும் வருவாய் பெறுபவர்கள் வாழ்க்கை நடத்த அவை வாய்ப்பாக இல்லை. பணத்தின் மதிப்பும் விலை உயர்வின் காரணத்தால் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் சேமிக்கும் எண்ணமேயின்றி மாதந்தோறும் முழு வ ரு வா யி னே யு ம் செலவிடுவோர் எதிர்பாராத செலவுகள் வரின் செய்வ தறியாது திகைப்பர். நமது உழைப்பும், ஊக்கமும் முன்னெச் சரிக்கையுமே வாழ்வு சிறக்க உ த வு.வ ன. வாழ்வில் வெற்றிபெற வருங்காலத்தைக் கருத்துட்கொண்டு பொருளைச் சேமிக்கவேண்டும். செலவும் சமுதாய விளைவும் நாம் எண்ணிச் செலவிடும் பணத்தால் நமக்கு விளையும் நலன்களைத் தவிரப் பிற விளைவுகளும் உண்டு. நம்முடைய நடைமுறைச் செலவுகளால் சமுதாயத்திலும் சில விளைவுகள் நேரக் காண்கிருேம். உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் வாங்குவதாகக்கொண்டால், புத்தகங்களுக்கான தேவை வளர்ந்து, அதுகாரணமாகப் புத்தகம் வெளியிடும் தொழில் வளர்ச்சி அடைகின்றது. இதற்கு நேர்மா ருக மக்கள் ஆடம்பரப் பொருள்களை வாங்கில்ை, அவற்றிற்குத் தேவை அதிகரித்து, அதன்மூலம் மக்கள் உழைப்பையும் முதற் பொருளையும் அத்தொழிலில் அதிகம் ஈடுபடுத்த நேரும். அதல்ை உணவுப் பொருள்கள், மருந்துகள் முதலிய அவசியமான பொருள்களை உற்பத்தி செய்யப் போட்ட முதலீட்டை அத்தொழிலில் போடச் செய்யும். எனவே அறிவற்ற வகையில் செய்யப்படும் செலவு, சங்கிலிபோல் த-சோ-25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/194&oldid=881123" இலிருந்து மீள்விக்கப்பட்டது