பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தொடர்புடையதாய்ச் செலவு செய்தவனை மட்டும் அன்றிச் சமூகத்தையே பாதிப்பதை நன்குணரலாம். எனவே சிக்கனமாக வாழக் கற்றுக்கொள்வது ஒருவனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு வேண்டிய பண்புமட்டுமன்று, அது நல்ல ஒழுக்கமும் ஆகும். அவன் தனது பணத்தையும், காலத் தையும் அறிவையும் வீணுக்காது அவன் சேர்ந்து வாழும் சமூகம் அவனைக் குடிமகளுகக்கொண்ட நாடும் பயன்பெற வழிசெய்வதுடன், தானும் நன்மை பெறுகின்ருன். எனவே தனி மனிதன். ஒவ்வொருவனின் செல்வமும் சேர்ந்ததே சமூகத்தின் மொத்த செல்வமாகும். ஒரு நா ட் டி ன் பொருளாதார நிலையும் அதைப் பொறுத்தே அமைகின்றது. அரசாங்கத்தின் பொறுப்புக்கள் நம் குடும்ப ஆக்கத்திற்காக நாம் பொருளீட்டி, காத்து, வகுத்து செலவிட்டுச் சேமிக்கிருேம். நாட்டின் ஆக்கத்திற் காகவும் தேவைப்படுவது பொருள்தான். பொய்யா மொழிப் புலவர், - செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எ.கதனிற் கூரிய தில்.’ என்று கூறியுள்ளார். பொருளைக் கொண்டுதான் சமுதாய நலத்தைப் பேணிக் காக்கவேண்டும். மிடிப்பயங்கொல்லவும்: துயர்ப்பகை வெல்லவும் உற்ற கருவி பொருளேயாகும். தனி மனிதன் தேவைகளை உழைப்பின் ஊதியத்தைக் கொண்டு சரிகட்டிக் கொள்கிறன். சமுதாயத் தேவைகளான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ நிலையங்கள், மின்வசதி, குடிநீர் வசதி, போக்குவரவு வசதிகள் முதலியவற்றை வழங்கும் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்துள்ளது. இவை தனி மனிதனின் கையில் இல்லை. அன்றி அயலார் படையெடுப்பினின்று நாட்டைக் காக்கும் பொறுப்பும், உள்நாட்டு அமைதியை நிலைநிறுத்தும் பொறுப்பும் அரசாங்கத்தினுடையது. மனிதன் சுயதேவைப் பூர்த்திக்குப் பொருளைச் செலவிடுவது போன்றே அரசாங்கங் களும் மக்களது பொதுத் தேவைக்காகப் பொருளைச் செலவிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/195&oldid=881125" இலிருந்து மீள்விக்கப்பட்டது