பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சிறுமியர் சிறுவயதிலிருந்தே சேமிப்புப் பழக்கத்தை மேற் கொள்ள இவை உதவுகின்றன. சில்லறைத் தொகைகளைக் கொண்டு இந்தத் தலைகளைப்பெற்று இலவசமாகக் கொடுக்கப் படும் அட்டைகளில் ஒட்டி ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் ஏதேனும் ஒரு சேமிப்பு முறையில் முதலீடு செய்யக் கொடுக்கலாம். அதுபோல் தலைகள் ஒட்டப்பட்ட அட்டை களைக் கொண்டு பரிசுப்பத்திரங்கள் வாங்கலாம். அஞ்சல் நிலையச் சேமிப்புக் கணக்குகளைத் துவக்கலாம். மாணவர்க்கு நீங்கள் மேற்கூறிய திட்டங்களில் எதையேனும் தேர்ந் தெடுத்து, உடனே சேர்ந்து உங்களால் இயன்றதைச் சேர்த்து வைத்தால் நீங்கள் பயன் பெறுவதோடு, நம் நாடும் பயன் பெறும். எவ்வளவு சேமிக்கின்றீர்கள் என்பதைவிடச் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதே முக்கியமானதாகும். எனவே சிக்கன வாழ்வு நடத்தி, பொருளைச் சேமித்து, பலன் பெற்று வாழ முயலுங்கள். சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு ! சேமித்து வாழ்வதே செம்மை வாழ்வு ! அருஞ்சொற்பொருள் : அயராது - சோர்வு இல்லாமல்; ஈட்டுகின்றனர்-திரட்டுகின்றனர்; சேய்மை - நெடுங் காலத்திற்குப்பின், செறுநர் - பகைவர்; செருக்கு - தருக்கு; எ.கு - படைக்கலம். வினுக்கள் : 1. சேமிப்பின் இன்றியமையாமையைப் புலப்படுத்துக. 2. குடும்ப வாழ்வில் ஏற்படும் தேவைகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம் ? அவை என்னென்ன ? 3. ஆக்க வேலைக்கு வேண்டிய பொருளை அரசாங்கம் எவ்வாறு பெறுகின்றது ? 4. ஐந்தாண்டுத் திட்டங்களைப் பற்றி விேர் அறிந்தவைகளைத் தொகுத்தெழுதுக. == - 5. சிறு சேமிப்பைப் பற்றி ஆசிரியர் கூறியவைகளைப் பதினைந்து வரிகளில் வரைக. 6. சேமிப்பினை முதலீடு செய்ய அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் யாவை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/199&oldid=881134" இலிருந்து மீள்விக்கப்பட்டது