பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 விளம்பரஞ் செய்தும், ஏற்றுமதி செய்தும் உதவவேண்டியது அரசின் கடமையாகும். இப்பொழுது இத்தகைய உதவிகளை அரசு செய்தும் வருகிறது. பெருங் தொழில்களால் சிறு தொழில்களுக்கு ஊறு நேராவண்ணம் காத்துக்கொள்வதும், போட்டிகள் உண்டாகாதவாறு கவனித்துக் கொள்வதும், வரிச்சலுகை காட்டுவதும் அரசு மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும். இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கிராமத்து மக்கள் ஊக்கமுடன் உழைப்பாராயின் அவர்களுக்கும் நாட்டுக்கும் நலம் பயக்கும். தீண்டாமை ஒழிப்பு இராமலிங்கர், காந்தியடிகள் போன்ற பெருமக்கள் இடை விடாது பாடுபட்டுங்கூட, இன்னும் நம் நாட்டில் தீண்டாமை ஒழிந்துவிட்டதென்று சொல்ல முடியவில்லை. பின் தங்கிய சில கிராமங்களை இன்னுங் காணுகிருேம். சாதி வேற்று மையை ஒழிக்கும் வகையில், அவர்கள் மனத்தில் நன்கு பதியும் வண்ணம் அறிவுரை தரும் முறையில் சொற்ப்ொழிவுகளை நிகழ்த்த வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' "சாதிகள் இல்லையடி பாப்பா' என்றும் ஆன்ருேர்கள் கூறிய கருத்துக்களை எடுத்துச் சொல்லி கி ரா ம ம க் க 2ள முன்னேற்றமுறச் செய்தல் வேண்டும். கி ர | ம த் தி ன் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நாம் எப்பொழுதும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மருத்துவ வசதி கிராமங்களில் வாழும் மக்கள் தூய்மைக் குறைவு காரணமாகப் பல வகையான நோய்களுக்கு ஆளாகின்றனர். அந்நோய் காரணமாக மருத்துவத்திற்கு நகரங்களை நோக்கி வரவேண்டிய நிலையில் அம்மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் ஊர்களிலேயே எல்லா வசதிகளையும் பெறத்தக்க வகையில் மருத்துவ மனைகளை அமைக்க வேண்டும். படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களும் கூச்சப்படாமல், வருவாய்ப் பெருக்கைமட்டும் மனத்திற்கொள்ளாமல், .ெ த ா ண் டு மனப்பான்மையுடன் சிற்றுார்களிற் பணிபுரிய முன் வருதல் வேண்டும். நோய்களைத் தணிப்பதோடு கில்லாமல் நோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/203&oldid=881144" இலிருந்து மீள்விக்கப்பட்டது