பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 பரவுங் காரணத்தை அம்மக்களுக்கு உணர்த்தி, நோய் வாரா முன்பே தடுத்துக் காக்கவேண்டும். மருத்துவ வசதிகளை எளிமையாகவும் குறைந்த செலவில் பெறுமாறும் செய்தல் வேண்டும். இன்னே ரன்ன பல துறைகளிலும் ஈடுபட்டுச் செம்மை செய்தாற்ருன் கிராமங்கள் முன்னேற்றம் அடையும். மேற்குறிப்பிட்ட துறைகளில் அரசாங்கமும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளது. மக்களும் அக்கறை காட்டத்தான் செய்கின்றனர். எனினும், இன்னும் பேரளவில் முனைதல் வேண்டும். எடுத்துக்கொண்ட செயல்கள் செவ்வனே நடைபெறவும், நோக்கம் நிறைவேறவும், முயற்சிகள் முழு மையும் கிராமங்களுக்கே பயன்படவும் பாடுபடவேண்டும். கிராம முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்; நாட்டின் முன்னேற்றம் நம் முன்னேற்றம் என்ற உணர்வு நம் நெஞ்சத்தே வேரூன்ற வேண்டும். நாட்டுப் பற்றின்றி எச்செயலை எவர் மேற்கொண்டாலும் எள்ளளவும் பயனில்லை. ஆதலின் இப்பற்றுள்ளவர்கள் இத்துறையில் ஈடுபடவேண்டும். இத்துறையில் ஈடுபட்டவர் இப்பற்றுடையராய் மிளிர்தல் வேண்டும். அருஞ்சொற்பொருள் : புனல் - நீர்; மருங்கு - பக்கம்; உ மி ழு ம் - வெளிப்படுத்தும்; ஊர்தி - வாகனம்; மாந்தர் - மக்கள்; துப்புரவு - தூய்மை; உறைவார் . வாழ்வார்; காட்டம் - கருத்து; கனன்று - கோபித்து; களைந்து நீக்கி. வினுக்கள் : 1. கிராமத்தின் பெருமைகள் யாவை ? 2. கிராம முன்னேற்றப் பணிகள் யாவை ? 3. கிராமங்களில் துப்புரவு எந்த அ ள வி ல் இருக்கிறது ? அவற்றைத் துப்புரவாக வைத்துக் கொள்வது எப்படி ? 4- கிராமத்து மக்களுக்கு எவ்வாறு கல்வியறிவைப் பரப்புதல் வேண்டும் ? 5. கிராமத்தொழில் வளர்ச்சி பற்றிப் பதினைந்து வரிகளில் தொகுத்தெழுதுக. 6. சாதி வேறுபாடுகளை எவ்வாறு நீக்குவது ? 7- கிராமத்து மக்களுக்கு மருத்துவ வசதிகளை எவ்வாறு அளிக்க வேண்டும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/204&oldid=881146" இலிருந்து மீள்விக்கப்பட்டது