பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மருணிக்கியார் அவதாரம் திலகவதி யார் பிறந்து சிலமுறையாண் டகன்றதற்பின் அலகில்கலைத் துறைதழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ உலகில்வரு மருணிக்கி யொளிவிளங்கு கதிர்போற்பின் மலருமரு னிக்கியார் வந்தவதா ரஞ்செய்தார். மருணி க்கியார் வளர்ச்சி மாதினியார் திருவயிற்றின் மன்னியசீர்ப் புகழனர் காதலன ருதித்ததற்பின் கடன்முறைமை மங்கலங்கள் மேதகுகல் வினைசிறப்ப விரும்பியபா ராட்டினுடன் ஏதமில்பல் கிளைபோற்ற இளங்குழவிப் பதங்கடந்தார். திலகவதியார்க்கும் கலிப்பகையார்க்கும் திருமண ஏற்பாடு அங்காளில் திலகவதி யாருக்காண் டாறிரண்டின் முன்கை ஒத்தகுல முதல்வேளாண் குடித்தலைவர் மின்னர்செஞ் சடையண்ணல் மெய்யடிமை விருப்புடையார் பொன்னரு மணிமெளலிப் புரவலன்பா லருளுடையார். ஆண்டகைமைத் தொழிலின்கண் ணடலரியே றெனவுள்ளார் காண்டகைய பெருவனப்பிற் கலிப்பகையா ரெனும்பெயரார் பூண்டகொடைப் புகழனர் பாற்பொருவின் மகட்கொள்ள வேண்டியெழுங் காதலினுல் மேலோரைச் செலவிட்டார். கலிப்பகையார் போர்மேற் செலவு கன்னித்திருத் தாதையார் மணவிசைவு கலிப்பகையார் முன்னணைந்தா ரறிவிப்ப வதுவைவினை முடிப்பதன்முன் மன்னவற்கு வடபுலத்தோர் மாறேற்க மற்றவர் மே லன்னவர்க்கு விடைகொடுத்தா னவ்வினைமே லவரகன்ருர். வேந்தற்குற் றுழிவினைமேல் வெஞ்சமத்தில் விடைகொண்டு போந்தவரும் பொருபடையு முடன்கொண்டு சிலநாளில் காய்ந்தசினப் பகைப்புலத்தைக் கலந்துகடுஞ் சுமர்க்கடலை நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறைவிளைத்தார். பெற்ருேர் பிரிவு ஆயாகா எளிடையிட்டா லணங்கனையா டனைப்பயந்த துாயகுலப் புகழனர் தொன்றுதொடு கிலேயாமை மேயவினைப் பயத்தாலே இவ்வுலகை விட்டகலத் தீயவரும் பிணியுழந்து விண்ணுலகிற் சென்றடைந்தார். 1u 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/27&oldid=881160" இலிருந்து மீள்விக்கப்பட்டது