பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காவளர்த்துங் குளங்தொட்டுங் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கு வளம்பெருக நல்கியும்கா னிலத்துள்ளோர் யாவருக்குங் தவிராத ஈகைவினைத் துறைகின்ருர் . 20 - சேக்கிழார். 4. கம்பராமாயணம் கங்கைப் படலம் (தந்தையின் ஆணேயைத் தலைமேற்கொண்டு காட்டிற்கு வக்க இராமன், தம்பி இலக்குவனுடனும் சீதையுடனும் கங்கைக் க ைபில் வந்து தங்கியுளான் என்பதறிந்து, காணும்பொருட்டுக் குகன் வந்தான். அவன் வருகையை இலக்குவன் கூறக்கேட்ட இராமன், அழைத்துவரப் பணித்தான். தான் கொணர்ந்த காணிக்கைகளே அன்புடன் குகன் தர, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட இராமன், கங்கையைக் கடப்பதற்கு காவாயுடன் நாளே வருகெனப் பணித்தான். இராமனே கிங்க மனமில்லாத குகன், ஈண்டிருந்து அடிமை செய்வேன்' என்ருன். இராமனும் இசைய ஆண்டிருந்து காவல் புரிந்தனன் குகன். இராமனும் சீதையும் துயிலும்போது, இரவு முழுதும் இலக்குவன் இமைப்பிலனுகிக் காத்திருந்த கிலேகண்டு, குகன் கண்ணிப் சொரிந்து வருந்தினுன். விடிந்தபின்னர், எல்லா நலங்களும் ஈண்டுள: ஆதலின் இங்கேயே தங்கியருள்க’ எனக் குகன் இராமனே வேண்டினன். "அன்ப கவலற்க, புண்ணிய கதிகளாடி விரைவில் நின் பால் வருவோம்’ என்று ஆறுதல் கூறினன் இராமன். அவ்வாருயின் தன்னேயும் அழைத்துச் செல்லுமாறு குகன் வேண்ட, இராமன் குகனேயும் உடன் பிறந்தவனுக ஏற்றுக்கொண்டு, அங்கேயே இருக்குமாறு பணித்தான்.) குகன் வருகையை இராமனிடம் இலக்குவன் கூறல் நிற்றியீண் டென்று புக்கு நெடியவற் ருெழுது தம்பி கொற்றவ நின்னைக் காணக் குறுகின னிமிர்ந்த கூட்டச் சுற்றமு தானு முள்ளங் தூயவன் தாயி னல்லான் - எற்றுநீர்க் கங்கை நாவாய்க் கிறைகுக ைெருவ னென்ருன். 1.

குகன் இராமனை வணங்கிக் காணிக்கை கொடுத்தான் அண்ணலும் விரும்பி யென்பா லழைத்திரீ யவனை யென்ருன் பண்ணவன் வருக வென்னப் பரிவினன் விரைவிற் புக்கான் கண்ணனைக் கண்ணி னேக்கிக் களித்தன னிருண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து நின்ருன் : இருத்தியின் டென்ன லோடு மிருந்தில னெல்லை நீத்த அருத்தியன் தேனு மீனு மமுதினுக் கமைவ தாகத் திருத்தினன் கொணர்ந்தே னென்கொல் திருவுள மென்ன விரன் விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/29&oldid=881164" இலிருந்து மீள்விக்கப்பட்டது