பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. பல்சுவை 1. புறநானூறு (அ) நல்ல கிலம் நாடா கொன்ருே காடா கொன்ருே அவலா கொன்ருே மிசையா கொன்ருே எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்ல வாழியு நிலனே. 1 -ஒளவையார். இன பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி (ஆ) செல்வத்துப் பயன் தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுங் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவு மெல்லா மோரொக் கும்மே செல்வத்துப் பயனே யிதல் ■ துய்ப்பே மெனினே தப்புரு பலவே. 2 -மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீரனர். | திணையும் துறையும் அவை 2. வருணனை (அ) மழை வெட்டி யடிக்குது மின்னல் - கடல் விரத் திரைகொண்டு விண்ணே யிடிக்குது ’கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக் குடையது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் எட்டுத் திசையு மிடிய - மழை எங்ங்னம் வந்ததடா தம்பி வீரா. -சி. சுப்பிரமணிய பாரதியார், - * த-சோ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/42&oldid=881196" இலிருந்து மீள்விக்கப்பட்டது