பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அருஞ்சொற்பொருள் : நாவலந் தீவு-இந்தியா; நாயகம்-தலைமை: ஒளிர்வாள்-விளங்குபவள்: கவின்.அழகு; கருவுயிர்த்த-ஈன்ற; காரிகை-பெண். சிவபெருமானப் பரவைபால் தூது செல்ல வைத்ததையும், திருமால் பசுந்தமிழ்ப் பின் சென்றதையும் நினைவிற் கொண்டே கடவுளர்க்கு ஏவல்தரும் இறைவி எனப்பட்டது.

  • -

ங் (இ) நாட்டு வாழ்த்து குறிப்பு :

  • அகிலும் தேக்கும்’ எனத் தொடங்கும் பாட்டு, பாரதிதாசன் அவர் களால் பாடப்பட்ட பாடலின் ஒருபகுதி. இவர் கனக சுப்புரத்தினம்

என்னும் இயற் பெயரினர். பாண்டிச்சேரியைச் சார்ந்தவர்; ஏராளமான பாடல்களை இயற்றித் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்து நிற்புவர் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் போற்றப்பட்டவர். இ வ. ர் த ம் துஜனவியார் பழனியம்மாள் என்னும் பெயரினர். தந்தையின் பெயர் கனகசபை முதலியார். காலம்: 29-4-1891 -21-4-1964 பாரதிதாசன் கவிதைகள், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு தமிழியக்கம் முதலான நூல்கள் பலவற்றைத் தந்தவர். அருஞ்சொற்பொருள் : - அகில்-ஒருவகை மரம்-மணந்தரும் புகைக்குரியது; முகில்-மேகம்: மணக்கும்-மணம் விசும்; அழியாக் குன்றம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பாரத தேவி குறிப்பு : இப்பாடலை இயற்றியவர் சி. சுப்பிரமணிய பாரதியார். பெற்ருேர்: சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மையார். ஊர்: எட்டயபுரம். விடுதலை வேட்கை, நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவற்றை இவருடைய பாடல் களிலே பரக்கக் காணலாம். எளிய இனிய சொற்களால் ஆனவை இவர் பாடல்கள். காலம்: 11-12-1882 - 11-9-1921. அருஞ்சொற்பொருள் : பாரதநாடு பராசக்தியாக உருவகஞ் செய்யப்பட்டுள்ளது. காலன்எமன்; கம்பனம்-நடுக்கம்; லேக்...கோலத்தினுள்-கடல் போன்ற கரிய நிறத்தையுடையவள்; மூன்று நேத்திரம்-முக்கண், காலக்...இட்டாள்காலங்கடந்தவள் என்னுங்குறிப்பு; காற்படின்-காலில் வீழ்ந்து வணங்கி ல்ை, பாரததேவியின் திருவடியை வணங்கில்ை எமனும் நம்மைக் கண்டு நடுங்குவன்; அவ்வாறிருக்க வேருெரு பகையும் உளதோ என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/47&oldid=881207" இலிருந்து மீள்விக்கப்பட்டது