பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 4. அன்று-இறக்குங்காலை. அறிவாம்-செய்வோம். என்னது-எனக் கருதாமல். மற்று-அசைகிலே. பொன்றுங்கால்-(உடல்) அழியும்போது. பொன்ரு-அழியாத பொன்ரு-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 5. வீழ்நாள்-(அறஞ்செய்யாது) கழியும் நாள். படாஅமை-உண்டா காதவாறு. நன்று-அறம். வாழ்நாள்-பிறவி, படாஅமை-இசை நிறையள பெடை. 3. என்பு:இலது-எலும்பில்லாத உடம்பு; புழு முதலியன. அன்பு இலது-அன்பற்ற உயிர். அறம்-அறக்கடவுள். என்பு-எலும்பு என்பதன் மரூஉ. இச் செய்யுள் உவமையணி. 7. யாக்கை அகத்து உறுப்பு-உடலின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்பு புறத்து உறுப்பு-இடம், பொருள், ஏவல் செய்வார் முதலாயின. எவன் செய்யும். இல்லறத்திற்கு என்ன பயனைத் தரும். 8. வித்து-விதை நெல். விருந்தோம்பி-விருந்தினரைப் பேணி. மிச்சில்-மீதம். மிசைவான்-உண்பான். புலம்-விளைநிலம். தானே விளையும் என்பது கருத்து. 9. செல்விருந்து தன்னிடத்து வந்த விருந்து. வானத்தவர்க்கு விருந்து என்றது மறுபிறப்பில் தேவனுவன் என்றவாறு. 10. துணை-அளவு பயன் தெரிவார்.பயனை அறிந்தவர். துணையாதுணையாக என்பதன் தொகுத்தல் விகாரம். 11. கொன்ற அன்ன...கொன்ருலொத்த. இன்ன-தியன. செயினும். செய்தாலும். ஒன்று நன்று-(அவர் செய்த) ஒரு நன்மையை, உள்ளநினைக்க. கொன்றன்ன...தொகுத்தல் விகாரம். 12. ஒருமை-ஒரு பிறவி. ஐந்து-ஐம்பொறிகள் அடக்கல்-அடக்கிக் கொள்ளுதல். எழுமை-எழுபிறப்பு. ஏமாப்பு-அரண். 13. யா-(காக்கவேண்டிய) எல்லாவற்றையும். சொல் இழுக்குப் பட்டு-சொற்குற்றம் உண்டாகி. சோகாப்பர்-தாமே துன்புறுவர். 14. குடிமை-உயர்குடிப் பிறப்பு. "இழுக்கம்-ஒழுக்கத்திற் றவறுதல். 15. ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தில்ை. இழுக்கத்தின்-ஒழுக்கந் தவறு வதல்ை. எய்தாப் பழி-அடாத பழி. 16. அழுக்காறு-பொருமை. திரு செற்று-செல்வத்தை அழித்து. தீயுழி-நரகம், அழுக்காறு இருமையுங் கெடுக்கும் என்பதாம், 17 அவ்விய நெஞ்சத்தான்-பொருமை யுடையவன். செவ்வியான். மனநலம் உடையவன். நினைக்கப்படும் - (காரணம் பழவினை என) ஆராயப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/49&oldid=881211" இலிருந்து மீள்விக்கப்பட்டது