பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 18. தாம் உடைமை-தமது செல்வத்தை வன்கணவர்-அருளில் லாதவர். 19. இரத்தலின் - இரத்தலை விட. மன்ற - உறுதியாக, நிரப்பிய - தேடி நிரப்பி வைத்தவைகளை. தமியர் உணல்-தனித்திருந்து உண்ணல். = † 20. சாதலின்-சாதலைப்போல. இன்-ஐந்தனுருபு ஒப்புப் பொருளில் வந்தது. இயைபாக்கடை-இயலாவிடின்; வினையெச்சம். இனிதது உம்இன்னிசை யளபெடை. 21. மனத்தொடு வாய்மை-மனத்தொடு பொருந்த உண்மையை. தவத்தொடு தானம்-தவமும் தானமும். செய்வாரின் தலை-செய்பவரை விடச் சிறப்புடையன். செய்வாரின்-இன் உருபு உறழ்ச்சிப் பொருளில் வந்தது. அகத்தாற் செய்வதே சிறப்புடைத்து என்றவாறு. 22. மெய்யா-மெய் நூல்களாக. பிற-பிற அறங்கள். வாய்மையின் நல்ல-வாய்மையினும் நல்லனவாகிய. எனத்தொன்றும்-எவ்வகையானும். 23. சேர்ந்தாரைக் கொல்லி-நெருப்பு. இனம்-உறவு, நட்பு ஆகிய. ஏமப் புணை-காப்பாகவுள்ள தெப்பம் போன்றவர். சுடும்-அகற்றிவிடும். 24. இணர் எரி-பல சுடர்களையுடைய பெருநெருப்பில். வெகு ளாமை புனரின்-அவனே வெகுளாமை கூடுமாயின். 25. மாசு அற்ருர்-குற்றமற்றவர்; மனந்துளயவர் கோள்-கொள்கை. 26. அறிவான்-அனுபவித்து அறிபவன். மன் உயிர்க்கு-நிலை பேறுடைய பிறவுயிர்களுக்கு. இன்ன இன்னதன. என் கொலோ-யாது காரணத்தால். 27. அற்கா இயல்பிற்று-நிலையாத இயல்பினையுடையது. அற்குபநிலைபெற்ற அறங்களை; பலவின்பாற் பெயர். ஆங்கே-அப்பொழுதே. செயல்-செய்க-அல்ஈற்று வியங்கோள். 28. சாக்காடு- இறப்பு. உறங்குதலும் விழித்தலும் இயல்பாகவும் விரைவாகவும் மாறிமாறியும் வருதல்போலப் பிறப்பும் இறப்பும் வரும் என்பதாம். 29. தாம் இன்புறுவது - தாம் இன்புறுவதற்குக் காரணமாகிய கல்விக்கு. உலகு இன்புறக் கண்டு-உலகத்தார். இன்புறுதலைக் கண்டு. காமுறுவர் மேலும் மேலும் அதனையே விரும்புவர். உலகு - இடவாகு பெயர். 30. செவிக்கு உணவு-கேள்வி. வயிற்றுணவினும் செவியுனவே சிறந்ததென்றவாறு. த-சோ-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/50&oldid=881215" இலிருந்து மீள்விக்கப்பட்டது