பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 14. நிலையாமை பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 15. கல்வியின் சிறப்பை வள்ளுவர் எங்ங்னம் கூறுகிருர் ? 16. கேள்வி பற்றிய வள்ளுவர் கருத்துக்களைத் தொகுத்தெழுதுக. 17. அறிவுடைமை பற்றி வள்ளுவர் கூறுவது யாது ? 18. சிற்றினஞ் சேராமை பற்றி வள்ளுவர் கூறுவன யாவை ? 19. வலியறிதல் பற்றி வள்ளுவர் கூறுவன யாவை ? 20. தெரிந்து தெளிதல் பற்றி வள்ளுவர் கூறுவன யாவை ? . 21. செங்கோன்மையின் சிறப்புக்களை வள்ளுவர் எங்ங்னம் கூறுகிருர் ? 22. கொடுங்கோன்மை பற்றி வள்ளுவர் கூறுவதுயாது ? 23. இடுக்கணழியாமை பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 24. சொல்வன்மை வேண்டுவோர் யாது செய்தல் வேண்டும்? ஏன்? 25. வினைத்திட்பம் பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 26. மக்கட் பண்பில்லாதவர் எத்தகையவர் ? - 27. உழவின் சிறப்பைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்கள் யாவை ? 28. பின்வரும் அணிகளைத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட் டுக்கள் தந்து விளக்குக. - 1. ஏகதேச உருவக அணி. உவமை அணி. பிறிது மொழிதல் அணி. எடுத்துக்காட்டுவமை அணி. சொற்பொருட் பின் வருநிலை அணி, 2. இன்னிலை இனியநிலையைக் கொடுப்பதால் இந்நூல் இன்னிலை என்று பெயர் பெற்றது. இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுக்குள் ஒன்ருகும் என்பர். சிலர் அவற்றின் வேருயது என்றுங் கூறுவர். இதனைப் பாடியவர் பொய்கையார்; தொகுத்தவர் மதுரையாசிரியர்; அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால், வீட்டுப்பால் என நான்கு பகுதிகளை யுடையது இந்நூல். மொத்தம் நாற்பத்தைந்து செய்யுட்களே இந்நூலில் உள்ளன. --

அருஞ்சொற்பொருள் : 1. உடைமை-செல்வம். அருது-இடைவிடாமல். ஈட்டல்-ஈட்டுக. யாண்டும் உறுதுணையாம்-எங்கும் தக்க துணையாகும். உடைமையராகசெல்வராக. இன்று-இன்றி, இல்லாமல். சுற்றம் உடையவரும்-சுற்றத் தாரும். வேறுபடும்-வேருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/53&oldid=881221" இலிருந்து மீள்விக்கப்பட்டது