பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 5. ஆசாரக்கோவை மக்கள் ஒழுக வேண்டிய ஒழுகலாறுகளைக் கோவைப்படுத்திக் கூறுவதால் இந்நூல் ஆசாரக்கோவை என்னும் பெயர் பெறுகிறது. இது பதினென்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. நூறு பாடல்களையுடையது. ஆசிரியர்: வண்கயத்துனர் என்னும் ஊரினரான பெருவாயின் முள்ளியார். காலம்: கடைச்சங்க காலம் என்பர். அருஞ்சொற்பொருள் : 1. வைகறை யாமம்-விடியற்காலமாகிய பின் சாமம். ஒண்பொருள்ஒள்ளிய பொருளுக்கு வருவாயான செயல்கள், வாய்வதில்-வாய்ப்புடைத் தாவதோடு. 2. பிறப்பு-நற்குடிப் பிறப்பு நெடு வாழ்க்கை-நீண்ட வாழ்நாள். வனப்பு-அழகு. நிலக்கிழமை-நிலத்துக்கு உரிமை. மீக்கூற்றம்-புகழ். இலக்கணத்தால்-முறையாக எய்துப-அடைவர். 3. சொல் சோர்வு-சொல் தவறுதல். வைதல்-திட்டுதல். நிலைமைபதவி. ஆண்மை-ஆற்றல் தக்க செயல்-தகுதியுடையனவாகச் செய்க. வினுக்கள் : 1. வைகறைப் பொழுதில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் யாவை ? 2. ஒழுக்கமுடையார் எய்தும் பயன்கள் யாவை ? 3. எவ்வெவற்றிற்கேற்ப எவ்வெவற்றைச் செய்தல் வேண்டும் ? 6. சிறுபஞ்சமூலம் கண்டங் கத்தரி வேர், சிறு வழுதுணைவேர், சிறுமல்லிவேர், பெரு மல்லிவேர், நெருஞ்சி வேர் என்னும் ஐந்து வேர்களைக்கொண்டு செய்யப் பட்ட மருந்து, உடற்பிணியை நீக்கி கலத்தைக் கொடுப்பதுபோல, இந் டி லில் வரும் ஒவ்வொரு செய்யுளும் கூறும் ஐந்தைந்து கருத்துக்களும் அறியாமையை அகற்றி அறிவு நலத்தைக் கொடுப்பதால் இந்நூல் சிறு பஞ்சமூலம் என்று பெயர் பெறுகிறது. பஞ்சமூலம்-ஐந்து வேர். பதினெண் i.ழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. ஆசிரியர்: காரியாசான். 1. அருஞ்சொற்பொருள் : 1. முன் பொருள் செய்யாதார் - முதுமை வருமுன்பே பொருள் தேடி வைக்காதவர். ஆதர் - அறிவிலார். துன்பம் இலேம் - (முன்பு செல்வமுடையால்) ஒரு துன்பமும் இல்லாதிருந்தோம். வனப்பு டையே ம் அழகு உடையவராயிருந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/56&oldid=881227" இலிருந்து மீள்விக்கப்பட்டது