பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைப் பகுதி 1. பயிர் வண்டும் படர் கொடியும் டாக்டர். ரா. பி. சேதுப் பிள்ளை , பி. ஏ. பி. எல். வேங்கை மரம் "வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக் கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்ருலம் ” என்று பிள்ளைப்பெருமான் போற்றும் பெருமை வாய்ந்த திரிகூட மலையின் ஒருசார் ஓங்கி வளர்ந்த ஒரு வேங்கை மரம் விண் அளாவி விளங்கிற்று, அதன் மருங்கே முளைத்தெழுந்த ஒரு மெல்லிய பூங்கொடி அவ்வேங்கையின் அழகிய கொம்புகளில் பின்னிப் படர்ந்து செழித்து வளர்வதாயிற்று. மஞ்சு தோய வளர்ந்து மாண்புற்று இலங்கிய வேங்கையின்மீது அவ்விளங் கொடி வரி வரியாய்ச் சுற்றிப் படர்ந்த கோலம் கண்டோர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் தன்மை வாய்ந்து விளங்கிற்று. அவ் வே ங் ைக யி ன் பூங்க்ொடிகளில் தீங்குயில்கள் மணந்து மகிழ்ந்தன; வண்டினங்கள் பண்ண மைந்த இசைபாடி மலர்களின் மதுவை மாந்திக் களித்தன. "தீங்குயில் மனந்துதேன் துஞ்சஆண்டு பாண்செய வேங்கை கின்று பொன் உகுக்கும் ” என்று சிந்தாமணி ஆசிரியர் வியந்துரைத்த இயற்கை அழகு அளவிலா உவகையளித்தது. நிலையாமை புணர்வு அவ் வேங்கை மரத்தின் அடிப்புறத்தில் ஆழ்ந்து அகன்ற ஓர் ஆறு அணிபெறச் சென்றது. மலையிடைப் பிறந்து சவியுறத் தெளிந்து, ஆழ்ந்து அமைந்து ஆன்ருேர் மனம்போல் அவ்யாறு அழகுற நடந்து சென்றது. அம் மலையில் வீசிய மெல்லிய இளங்காற்றில் வேங்கையின் பூ, ங் .ெ கா ம் பு க ள், அசைந்து பொன்மலர் சொரிந்தன. இளங்கொடி வேங்கையின் கிளைகளில் இனிதாய்த் துவண்டது. இளங்திரைகள், ஆற்றில் அலைந்து இன்புற்று இலங்கின. அப்போது சேய்மையில் த-சோ-10 +

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/74&oldid=881268" இலிருந்து மீள்விக்கப்பட்டது