பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஒல்லென ஒர் ஒலி கிளம்பியது. அதன் தன்மையை மனத்தாற் கருது முன்னரே கடுங்காற்று வேகமாய்ச் சுழன்று வீசத் தலைப் பட்டது. விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் வீசிய புயல் காற்றின் வெம்மையால் மலைப் பொருள்கள் எல்லாம் மயங்கிச் சுழன்றன. அக் கடும் புயலின் வேகத்திற்கு ஆற்ருது மலையே நிலைகுலைந்தது. வெறிகொண்ட புயலில் அகப்பட்ட வேங்கை மரம் வேரோடு அற்று அருகே சென்ற ஆற்றில் விழுந்தது. வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து பூத்துச் செழித்து விளங்கிய வேங்கை விழுவதைக் கண்ட எமது உள்ளம் வெதும்பியது. உலகப் பொருள்களின் கிலேயாமையை நினைந்து நெஞ்சம் உலைந்தது. வண்டும் பைங்கொடியும் இவ்வாறு வேங்கை சாய்ந்து, வேகமாய்ச் செல்லும் ஆற்றில் விழுந்தபோது, அதனைச் சுற்றிப் படர்ந்திருந்த மெல்லிய கொடியும் வேரற்று அம்மரத்தோடு ஆற்றில் மயங்கி விழுந்தது; ஆயினும் அவ் வேங்கையில் தீந்தேனுண்டு திளைத்த வண்டுகள் மரத்தோடு பூவும் மாளக் கண்டு, கிலே யழிந்த வேங்கையை நீத்து ஆர்த்தெழுந்து அயல் கின்ற மற்ருேர் மலரில் சென்று சேர்ந்தன. இதனை நோக்கியபோது மதுவுண்டு மயங்கும் வண்டின் இழிகுணம் மனத்தை வாட்டி வருத்தியது. 'காலாடு போழ்தில் கழிகிளேஞர் வானத்து மேலாடு மீனில் பலராவர்-ஏ லா இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட தொடர்புடையேம் என்பார் சிலர்' o என்னும் பெரியாரது மொழிகளின் பொருளைத் தெள்ளிதில் தெரிந்தோம். கெடுமிடத்துக் கைவிடும் கருவண்டு போலாது பெருந்துயர் நேர்ந்தபோதும் பிரியாத பெருந்தன்மை வாய்ந்து திகழ்ந்த பூங்கொடி அருங்குல மங்கையர் போல் அமைந்து விளங்கிற்று. வேரூன்றி முளைத்த இடத்தினின்றும் படர்ந்து போந்து வேங்கையைப் பற்றித் தளிர்த்து வளர்ந்த கொடியின் தன்மை, மணப்பருவம் வாய்ந்த மங்கை பிறந்த மனையினின்றும் போந்து தலைமகனைச் சேர்ந்து வாழும் தகைமையில் அமைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/75&oldid=881273" இலிருந்து மீள்விக்கப்பட்டது