பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 மேனியும் தளர்ந்து வருந்த, அத்துயரைப் பொறுத்து, தலேவனது துயரைக் கண்டு தளர்ந்த கண்ணகியின் பெருமையை,

"Ei கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு நடுங்கு துயர் எய்தி நாப்புலர வாடித் தன் துயர் காணுத் தகைசால் பூங்கொடி’ என்று சிலப்பதிகாரம் இ னி து எடுத்துரைக்கின்றது. இவ்வாறு மண்மகளும் அறியாத வண்ணச் சீறடிகள் வருந்தக் கானகத்தில் நடந்து கணவன் துயர் களைந்த கண்ணகியின் பெருமையைக் கோவலன் கண்டு மனங் குழைந்தான். "நானமும் மடனும் கல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணே யாக என்னெடு போந்துஈங்கு என் துயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய்' என்று புகழ்ந்து போற்றின்ை. குலமாதர் நெறி இவ்வாறு கணவனைப் பிரியாத பெருவாழ்வு வேண்டி இறைவனை வாழ்த்துவதே கிறை அமைந்த மாதர் நெறியாகும். இத்தகைய மாதர் கணவரோடு இன்பமும் துன்பமும் ஒருங்கே நுகர்ந்து அவர் ஆவி துறப்பின் அங்கிலேயே உயிர் நீப்பர் என்பதும் அறியப்படுகின்றது. நீரில் ஆமைந்து வாழும் நீல மலர் அந்நீர் வற்றியபோது அவ்விடதிதே வற்றி உலரும் தன்மை போல், கற்பமைந்த மங்கையர் கணவன் வாழுங் காலத்து அவனுடன் இனிது வாழ்ந்து, அவன் அழியும் காலத்துத் தாமும் அகமகிழ்ந்து அழிவர். இத்தன்மை வாய்ந்த குலமாதர் நெறியைக் கொடியின் தன்மையோடு ஒப்புநோக்கிக் கம்பர் அமைத்துள்ள கற்பனை, தேன் எனத் தித்திக்கும் தகையதாகும். 'நிலம ரங்கிய வேரொடு நேர்பறித்து 1 轟 அலம ரும் துயர் எய்திய ஆயினும் வலம ரங்களை விட்டில மாசிலாக் குலம டங்தையர் என்னக் கொடிகளே” என்னும் கம்பர் கவியில் அமைந்துள்ள சொல் நயமும் பொருள் கயமும் ஆயுந்தோறும் அளவிறந்த இன்பம் பயப்பனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/78&oldid=881279" இலிருந்து மீள்விக்கப்பட்டது