பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பொன் காத்த கிழவி டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டைக்கு அருகில் காவிரியாற்றின் தெற்கே குடமுருட்டி யாற்றுக்கு வடகரையில் உள்ளிக்கடை என்னும் சிற்றுார் ஒன்று உண்டு. அதில் உள்ள அக்கிரகாரத்தில் முற்காலத்தே பெரும்பான்மை எண்ணுயிர வகுப்புப் பிராமணர்களும், சிறுபான்மை வேறு வகைப் பிராமணர்களும் வாழ்ந்து வந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன் அந்த எண்ணுயிர வகுப்பின ருள்ளே பெருஞ்செல்வர்களுடைய குடும்பம் ஒன்று இருந்தது. அக்குடும்பத்தினருக்கு மிகச் சிறந்த கிலங்களும் பெருங் தொகையாகிய செல்வமும் இருந்தன. அவர்களிடமிருந்த பணத்தைப் பிற்காலத்தில், சகோதரர்கள் முகக்கும் அளவை யால் அளந்து பிரித்துக்கொண்டார்களென்று சொல்லு வார்கள். ஆதியில் அந்தச் சகோதரர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தம்முடைய பணத்தைப் பெரிய குடங்களிற் ோட்டு வைப்பது வழக்கம். அவற்றை நிலத்திற் புதைத்து வைப்பார்கள். ஒரு குடத்துக்கு இவளவு ருபாய் என்ற கணககு உண்டு. ஒரு சமயம் உள்ளிக்கடைக்குச் சில கல் தொலைவில் உள்ள ஓர் ஊரில் வசித்து வந்தவரும், முற்கூறிய குடும்பத் தினருக்கு நெருங்கிய உறவினருமாகிய ஒரு செல்வர் வீட்டில் ஒரு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. ஏழை பணக்காரர். என்ற வேறுபாடு இன்றி விசேட நாள்களில் உறவினர்களை அழைப்பதும், அவர்களுடைய வீ ட் டி ற் கு உறவினர்கள் எல்லாரும் சென்று தம்மாலான உதவிகளைச் செய்வதும், அக்காலத்து வழக்கங்கள். ஆதலின் உள்ளிக்கடையிலிருந்து அக்குடும்பத்திலுள்ளவர்கள் திருமணம் நடைபெற்ற ஊருக்குச் சென்றுவிட்டனர். வீட்டிற்குக் காவலாக ஒரு கிழவியையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/80&oldid=881285" இலிருந்து மீள்விக்கப்பட்டது