பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 மட்டத்தின் மேலே வருவர்; சில நேரம் கழித்து மறுபடியும் குளிப்பர். இப்படிப் பலமுறை நிகழும். இவர்கள் இந்த வேலையில் நாள் முழுவதும் விடாப்பிடியாக ஈடுபடுவார்கள். எல்லா நாடுகளுக்கும் வேண்டும் அளவு சங்குகளை இவர்கள் ஒரு பருவத்திற்குள்ளேயே தங்கள் முயற்சியால் சேர்த்துவிடு வார்கள். இந்த வளைகுடாவில் உள்ள முத்துத்துறையில் கிடைக்கும் முத்துக்கள் பெரும்பான்மையும் உருண்டை யாகவும் நல்ல ஒளியுடையனவாகவும் உள்ளன. பெருவாரி யாகச் சங்கு எடுக்கும் இடம் தாய்காட்டிலேயே இருக்கிறது. இதற்குப் பெதெலா என்று பெயர். இங்கிருந்து இந்தத் துறை தெற்கே 96 கிலோ மீட்டர்கள் (60 மைல்) வரை நீண்டு செல்கிறது.' -- இந்த வளைகுடாவில் ஒருவகைப் பெரிய மீன்கள் நிறைந்து கிடக்கின்றன. இவை குளிக்கிறவர்களை அடிக்கடி கொன்று தொலைக்கின்றன. இதற்காகச் சில மந்திரக்காரர்களை இந்த வணிகர்கள் தங்களோடு அழைத்துச் செல்கிருர்கள். இவர்கள் பார்ப்பனக் குடியைச் சேர்ந்தவர்கள். தங்களுடைய மந்திர வித்தையால் இந்த மீன்களை வசியம் பண்ணித் தங்கள் விருப்பப்படி நடக்கச் செய்து ஒரு கேடும் விளையாதபடி இவர்கள் தடுக்கின் ருர்கள். முத்துக் குளிப்பது பகலில்தான் நடக்கும். ஆகையால் இவர்கள் மாலையில் மந்திர சக்தியைச் செலுத்தாமல் விட்டு விடுவார்கள். இராக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு முத்துச் சங்குகளைத் திருட வந்து குளிக்கும் வஞ்சகர்கள், மந்திரக் கட்டில்லாத இந்த மீன்கள் நடையாடுவதற்கு அஞ்சி, அவ்வாறு செய்ய முனையாது விட்டுவிடுவார்கள் என்பது இவர்களுடைய எண்ணம். இந்த மந்திரக்காரர்கள் இதைப் போல எல்லா. வகையான பறவைகளையும் விலங்குகளையும் வசியம் செய்யும் கலையிலும் கைதேர்ந்தவர்கள்.' 'முத்துக் குளிப்பது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்; மே மாதம் நடுவரை நடைபெறும். இத்தொழிலில் ஈடுபடும் உரிமையை அரசனிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். இந்தத் தொழிலில் வருவாயில் பத்தில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/88&oldid=881299" இலிருந்து மீள்விக்கப்பட்டது