பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பங்கே அரசனுக்குத் தரும் விலையாகும்; மந்திரக்காரனுக்கு இருபதில் ஒரு பங்கு சேரும். எனவே, வணிகர்களுக்கே இதல்ை பெரிய ஊதியம் உண்டு. மேலே சொல்லிய பருவ காலம் முடிவதற்குள், சங்குகளும் அந்த இடத்தில் குளித்தாய் விடும். பின்னர்க் கப்பல்களை அவர்கள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்வர்; இந்த வளைகுடாவிலிருந்து 480 கிலோ மீட்டர் தூரம் போவர்; அங்கே செப்டம்பர் மாதத்தில் தங்கத் தொடங்கி அக்டோபர் மாதம் நடுவரை இருப்பர். அரசன் மேற்கண்டவாறு பத்தில் ஒரு பங்கு முத்துக்களைப் பெறுவ தோடு நல்ல வடிவாய் உள்ள பெரிய முத்துக்களையும் பொறுக்கி எடுத்துக்கொள்ளலாம். அவற்றிற்கு அவன் நிறையப் பணம் தருவதால், அவற்றை அவனிடம் கொண்டு போய்க் காட்டுவதில் வணிகர்கள் கசப்பு ஒன்றும் கொள்வதில்லை." நாட்டின் இந்தப் பகுதியில் உள்ளவர்கள், மானத் திற்காகக் காக்கவேண்டும் உறுப்புக்களை மட்டும் சிறு துணியால் மறைத்துக் கொண்டு மற்றைப்படி ஏறக்குறைய கிருவாணமாகப் போகின்ருர்கள். அரசன், விலையான துணிகளை உடுத்திக் கொண்டிருக்கிருன் ' என்பது தவிர, அவன் ஒன்றும் பிறரைவிட மிகுதிப்படியாக உடை யணிக் திருப்பதில்லை; ஆனல் பலவகை அணிகலன்களைப் பூண்டு பிறரினும் பெருந்தன்மையாகச் சி ற ந் து விளங்குகிருன்: விலையேறிய நீலம், பச்சை, கெம்பு முதலிய இரத்தினங்கள் நிறைந்த கழுத்துப் பட்டை (கண்டசரம்) பட்டு நூலில் முத்தும் கெம்பும் கோத்துக் கழுத்திலிருந்து மார்புவரை தொங்கும் மாலை (ஹாரம்; இரட்டை மணிமாலை) இவற்றை அணிந்திருக்கிருன். இந்த மாலையில் மணிகள் 104. (108 என்பதனை மறந்து 104 என எழுதுகிருர் மார்கோ போலோ) 104 என்ற எண்ணுக்குக் காரணம் உண்டு. அரசனுடைய சமய முறைப்படி ஒவ்வொரு நாளும் தன் கடவுளை நோக்கி அத்தனை முறை மந்திரம் செபம் செய்ய வேண்டும். அவனுடைய முன்னேர், என்றும் இதிலிருந்து தவறியதே இல்லை. இந்த மந்திரம், பகஉதா' என்ற சொல்லே ஆம். (பகஉதா என்பது பகவத் என்பதனைக் குறிக்கலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/89&oldid=881301" இலிருந்து மீள்விக்கப்பட்டது