பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பகவான் எனத் தமிழில் வழங்கும் இந்தச் சொல்லேக் கேட்டது நினைவில் இருந்திருக்கலாம். பாண்டியர்கள் சைவர்கள்; ஆதலின் நமச்சிவாய' என்ற மந்திரத்தினையே செபித்திருப்பார்.) இந்த மந்திரத்தினை இவர்கள் 104 (108) முறை செபிக்கின்றனர். பொன்னல் செய்து முத்தும் மணியும் கொண்டு புனைந்த தோள்வளைகள் மும்மூன்றினைத் தோளில் அரசன் அணிந்திருக்கின்ருன் அவ்வாறே புனைந்துள்ள பொன் பட்டைகளை (கழல் சிலம்பு முதலியவற்றை)த் தன் காலில் மூன்று வேறு இடங்களில் பூண்கின்றன்; கால் விரல் களிலும் கை விரல்களிலும் மதிப்பிட முடியாத மோதிரங்களை அணிந்து கொண்டிருக்கிருன். இந்த இரத்தினங்களும் முத்துக்களும் இவனுடைய நாட்டுப் பொருள்கள் ஆதலின், இவ்வளவு பெருமிதமான அரசச் சின்னங்களை அழகாக வெளிக் காட்டிக்கொள்வது இந்த அரசனுக்கு மிக மிக எளிதாம்.' - அரசன் தன்னைச் சுற்றிப் பல வீரர்களை வைத்திருக் கிருன். இம்மைக்கும் மறுமைக்கும் அரசனுக்கு வேலைக் காரர்' என்ற சிறப்புப் பெயர் அவர்களுக்கு உண்டு. அவர் மெய்காப்பாளராய் அரண்மனையில் அரசனது திருமேனியைக் காக்கின்றனர். உலாப் போகும்போது பக்கத்தில் குதிரை யேறிச் செல்கின்றனர். எப்பொழுதும் அரசனுடனேயே செல்கின்ற உடனுறை சுற்றம் அவர்களே ஆவர். அவர்கள் அரசாங்கத்தில் எல்லாத் துறைகளிலும் மிக்க அதிகாரம் செலுத்தி வருகிருர்கள். அரசன் இறந்ததும் அவனுடலேக் கொளுத்தும் சடங்கு -ಣ್ಣ"/ உண்மைச் சேவகர்கள் அந்தத் தீயில் குதித்து அரசினது உடலோடு எரிந்து சாம்பராவார்களாம். மறுபிறப்பிலும் அவனுடைய உடனுறை சுற்றமாகத் .ெ த ண் ட | ற் ற இவ்வாறு செய்வார்களாம்.' ■ கீழேகண்ட வழக்கமும் இதேபோல் வழங்கி வருகின்றது. அரசன் இறந்தால் அவனுக்குப் பின் அரசகுைம் அவனுடைய மைந்தன், முன்னவன் விட்டுப்போன பண்டாரத்தை (பொக்கி ஷத்தை)த் தொடுவதே இல்லை. நாடு முழுவதும் தனக்கு த-சோ - 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/90&oldid=881305" இலிருந்து மீள்விக்கப்பட்டது