பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஓவியக்கலைஞர்-இரவிவர்மா . பன்மொழிப்புலவர் திரு. கா. அப்பா த் துரை, எம். ஏ. , எ ல், டி. பாரதியார் பாராட்டு "இயற்கையில் அழகு எங்கும் கனிந்து தவழ்கின்றது. மலரிலே அது புன்னகை பூத்துக் குலுங்குகிறது. நீலவானிலே அது களிங்டம் புரிகின்றது. மாதர்தம் முகங்கள்தோறும் அது தண்ணிலவொளி வீசுகின்றது. இங்ங்ணம் இயற்கை தன் அழகு வண்ணத்தை யெல்லாம் காட்டிக் களிகூருவது எதற்குத் தெரியுமா?' என்று ஒரு கேள்வி கேட்கிருர் கவிஞர் பாரதி. 'உலகப்புகழ் பெற்ற கலைஞன் இரவிவர்மன், இந்த மெய் வண்ணங்களை யெல்லாம் காணட்டும்; கண்டு மகிழ்ந்து, தன் மைவண்ணங்களைத் தோய்த்துக் கைவண்ணம் தீட்டிக் காட்டட்டும். இதுவே இயற்கையின் உட்கோளாயிருக்க வேண்டும்' என்று அவரே தம் கேள்விக்குக் கவிநயம் பட ஒரு மறுமொழியும் தந்து சொல்லுகிருர். கவிஞர் பாரதியின் இத்தற்குறிப்பேற்ற அணி நயம், கலைஞரின் கலை நயத்தை எவ்வளவு திறம்பட எடுத்துக் காட்டுகிறது ! காவியக் கலைஞரால் இத்தகு சீரிய பாமாலை சூட்டிப் பாராட்டப் பெற்ற ஓவியக் கலைஞர், இரவிவர்மா. புகழ் பரப்பிய கலைஞர் இரவிவர்மா மலையாள நாட்டில் பிறந்தவர். மன்னர் குடி மரபில் பிறந்து வளர்ந்தவர். ஆனல் அவர் கலைவனப்பு, மலையாள நாட்டெல்லையையும் மன்னர் பெருமக்கள் மரபெல்லை யையும் தாண்டி, தமிழகத்தின் மக்கட் கவிஞன் பாரதியின் உள்ளத்தை அளாவிற்று. அது மட்டுமன்று; இரவிவர்மா தென்னட்டுக்கு உரியவர். தென்னுட்டின் தலைசிறந்த ஓவியக் கலைஞர். ஆனால், அவர் புகழொளி, தென்னடெங்கும் பரவியதுடன் நிற்கவில்லை. வடநாட்டிலும் பொங்கி வழிந்தோடிற்று. அது கீழ்நாடு கடந்து, மேலே நாடுகளிலும் பரந்தது. தென்னுட்டுக் கலைஞர் எவரும் அவரைப் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/94&oldid=881313" இலிருந்து மீள்விக்கப்பட்டது