பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ்த் தாத்தா

தந்தை எண்ணினார். ஆனால் அதில் இவருக்கு உள்ளம் செல்லவில்லை. இசையில் பயிற்சி உடையவர்கள் அக்காலத்தில் தெலுங்கு கற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அவ்வாறே இவருக்குத் தெலுங்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடாயிற்று. ஆனால் அதிலும் இவருக்கு மனம் செல்லவில்லை.

அக்காலத்தில் அந்தப் பக்கங்களில் கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனர் சரித்திரக் கீர்த்தனை எங்கும் பரவியிருந்தது. இந்த இளைய மாணாக்கருக்கு அதில் ஈடுபாடு. அதிலுள்ள கீர்த்தனைகளிற் பெரும்பாலும் பாடம் ஆயின. இவரே பாடிப் பாடி இன்புறுவார். அரியலூரில் இவருடைய தந்தையார் இருந்தார். அப்போது சடகோபையங்கார் என்பவருடன் பழக்கம் உண்டாயிற்று. அவர் பூரீவைஷ்ணவர்: கவிஞரும்கூட; தமிழை ஓரளவு நன்றாக பயின்றவர். அவரிடத்தில் ஆசிரியப் பெருமான் சில காலம் தமிழ் கற்றுக் கொண்டார். பாடம் சொல்வதில் சடகோபையங்கார் மிகவும் ஊக்கம் உள்ளவர்; நயமாகப் பொருளைச் சொல்பவர். பாகவதம், கம்பராமாயணம் முதலிய நூல்களை நன்றாகச் சொல்லித் தருவார். ஆசிரியப் பெருமான் தம் இளமைப் பருவத்தில் அந்தப் பெரியவரிடம் பாடம் கேட்டதனால் தமிழில் மிக்க சுவை உண்டாயிற்று.

இளம் பருவத்தில் அந்தணருடைய வழக்கப்படி இவருக்கு உபநயனம் நடைபெற்றது. அப்போது இவருக்கு வேங்கடராம சர்மன் என்று நாமகரணம் செய்தார்கள். அந்தப் பெயராலேயே இவரை அழைத்து வந்தார்கள். எனினும் அந்தப் பெயர் இவருடைய முன்னேரின் பெயராய் இருந்ததனால் உறவினர்கள் அதைச் சொல்லி அழைக்காமல் 'சாமா என்று சொல்லி அழைத்தார்கள். திருவேரகத்திலுள்ள சுவாமிநாதன் என்பதையே சுருக்கி அப்படி அழைப்பது வழக்கம்.

குன்னம் என்ற ஊரிலுள்ள சிதம்பரம் பிள்ளையிடம் சில காலம் பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அங்கே சில சிறிய நூல்களையும், திருவிளையாடல் புராணத்தையும் பாடம் கேட்டார். பல தனிப் பாடல்களைப் பாடம் பண்ணிக்கொண்டு, அவற்றின் சுவையில் ஆழ்ந்தார். .

கார்குடியிலிருந்து வந்திருந்த கஸ்தூரி ஐயங்கார் என்பவர் இப்பெருமானுக்குத் தமிழில் இருந்த தேர்ச்சியையும், ஆர்வத்தையும் அறிந்து, தம் ஊருக்கு வந்து தங்கினால் தமக்குத் தெரிந்தவற்றையும் சொல்லித் தருவதாகச் சொன்னார். அப்படியே அந்த ஊருக்குத் தந்தையாருடன் இவர் சென்றார். கஸ்தூரி ஐயங்கார்