பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


வழிபாடாற்றிக் கலசத்திலுள்ள நீரினைக் கொண்டு பந்தற் காலினைக் கழுவும்படி செய்வர். இந்த நிகழ்ச்சியை அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்பப் பெரியோர் கருத்தறிந்து செய்தல் நலம்.

உறுதி செய்தல்

இது திருமணம் நிகழ்வதற்கு முன்னர் மணமகள் வீட்டில் நிகழும் நிகழ்ச்சியாகும். மணமகனுக்கு உரியோரும் மணமகளுக்கு உரியோரும் ஒரு நல்ல நாளில் உற்றார் உறவினர் முன்னிலையில் ஒருவருக்கொருவர் உறுதி கூறிக் கொள்வது மரபு. பெண்வீட்டார் தம் பெண்ணைக் குறித்த ஒரு மணமகனுக்குத் தருவதாகவும் அவ்வாறே அம்மணமகன் வீட்டார் மணமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாகக் குறித்த ஒரு பெண்ணை ஏற்றுக் கொள்வதாகவும் ஒருவர்க்கொருவர் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் ஆசிரியர் முன்னிலையில் சுற்றத்தார்கள் நண்பர்கள் சான்றாக விளங்க உறுதி செய்து கொள்ளவேண்டும்.

திருமணம் செய்யத் தேவைப்படும் இன்றியமையாப் பொருள்கள்

1. மஞ்சள் பொடி 17. நெய்
2. குங்குமம், திருநீறு 18. நெற்பொரி
3. சந்தனம் 19. பூமாலை
4. பூச்சரம் 10 முழம் 20. பொற்றாலி
5. வெற்றிலை பாக்கு 21. மணமக்களுக்குப்புத்தாடை
6. வாழைப்பழம்-மூன்று 22. சமித்து
7. தேங்காய்-மூன்று 23. மோதிரம்
8. கற்பூரம் 24. மங்கலவாத்தியம்
9. சாம்பிராணி 25. பெரியதட்டு-இரண்டு
10. ஊதுவத்தி 26. சிறியதட்டு ஒன்று
11. தலைவாழையிலை-மூன்று 27. ஆசனப்பலகை-இரண்டு
12. பச்சரிசி உழக்கு 28. வெல்லம்
13. மாவிலைக்கொத்து 29. செம்பு-இரண்டு
14. குத்துவிளக்கு இரண்டு 30. முக்காலி
15. திரிநூல் 31. முழுமஞ்சள்-மூன்று
16. நூல் கண்டு