பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

கையில் கட்டப்பட்டுள்ள காப்புநாணை அவிழ்த்தல்.மணமகளை அழைத்து வரச்செய்து மணமகள் கையில் கட்டப்பட்டுள்ள காப்புநாணை மணமகன் அவிழ்த்தல்.இந்நிகழ்ச்சியுடன் திருமணம் நிறைவுறுகிறது.

வைணவ சமயத்தவர் திருமணத்திற்குப் பொருத்தமான பாடல்கள்

பச்சைமா மலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே !
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே ! 1
கங்கையின் புனித மாய
காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர் பரிந்து பாயும்
பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
கிடந்ததோர் கிடக் கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ?
ஏழையேன் ஏழை யேனே. 2
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுது யராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள் விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். 3