பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

111


நேரத்தில் அதிகாரிகள் வந்தபோதிலும் மகாசபைகள் கணக்கு வழக்குகளைக் காண்பித்தேயாக வேண்டும். சில சமயங்களிலே மன்னனே நாட்டைச் சுற்றி வருகையில் மகாசபைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் உண்டு. அக்காலை மகாசபைகளின் தவறுகளை மன்னன் திருத்துதலும், தண்டித்தலும் உண்டு.

ஓரமயம் மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் சோழன் ஒரு கோவிற்குச் சென்றான். அங்கே கோவிற்குச் செய்யவேண்டிய பூசையும் விழாவும் பிறவும் ஒழுங்காகச் செய்யாமலும், கோவிற்கு வேண்டிய பொருள்கள் மிகவும் குறைந்த முறையில் அளிக்கப்படலும் கண்டு வெதும்பி மகாசபை அதிகாரிகளைக் கூப்பிட்டுக் கண்டித்து, அதிலிருந்து கோவிற்காரியங்களைக் குறைவின்றி நடத்துமாறு உத்தரவிட்டுச் சென்றதாகத் திருவல்லம் கல்வெட்டுக் கூறுகிறது.

நீதி வழங்குதல்

இந்தக் காலத்திற்கூட நன்கு படித்த ஒரு சில அறிஞர்கள், நீதிமன்றங்கள் என்பன வெள்ளைக்காரர்களே கண்டுபிடித்தவை; நாட்டிலே அவர்கள் தான் நீதிநிர்வாகம் முதலில் ஏற்படுத்தியவர்கள் என எண்ணியும், எழுதியும் வருகின்றனர். சோழர்காலக் கல்வெட்டுக்களைப் பார்ப்போருக்கு இக்கருத்து நகைப்பிற்குரியது. இன்று நடைபெறுகின்ற நீதிமன்றங்களைவிட மிகச் சிறந்த முறையிலே அக்காலத்தில், நீதிமன்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

நாகரிக மிக்க இந்த இருபதாம் நூற்றாண்டிலே மரண தண்டனை மிகமிகச் சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் நானூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சோழர் காலத்திலே