பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

121


கொண்ட இராசேந்திரன் வடநாடு நோக்கிப் படையெடுத்தான். கங்கை வரைச் சென்று வெற்றிபெற்ற இவன் அதன் அறிகுறியாகக் கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவி, அதனைத் தன் தலைநகராக்கி அங்கிருந்துகொண்டு ஆட்சி செலுத்தலானான். மேலும் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற கோவிலும் இவனால் இங்குக் கட்டப்பட்டது. அளவில் சிறிய இக்கோவில் தோற்றத்தில் தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்தே விளங்கியது. இக்கோவில் 582 அடி நீளமும், 372 அடி அகலமும் கொண்டு 174 அடி உயரமுடைய கோபுரத்துடன் விளங்கியது. மேலும் வெளிப்புற மதிலில் ஆறு கோபுரங்களும், நான்கு மூலைகளிலும் கொத்தளங்களும் இருந்தன. இம்மதிலைச் சுற்றி ஆழமான அகழி ஒன்று இருந்ததாகவும் தெரியவருகின்றது. அழிந்துபோன இக்கோவிற் கற்களைப் பிற்காலத்தில் கொள்ளிடத்தில் கட்டப்பட்டிருக்கும் 'லோயர் சொலரூன்' அணைக்கட்டிற்குப் பயன்படுத்தியதாகப் பரோலா எழுதியுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கருகில் இராசேந்திரனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற ஏரி அளவில் பெரியதாக விளங்கியதால் இதைச் சுற்றிலும் இருந்த நிலங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடில்லாது முதல் தரமான பாய்ச்சல் வசதியுள்ளவையாய் விளங்கின. இவ்வேரியானது 16 மைல் நீளமுள்ள வலிமை மிக்க கரையையும், பல மதகுகளையும் கொண்டிலங்கியது. ஆனால் இன்று இவ்வேரி பயனற்றதாய், காடுஞ்செடியும் மண்டிக் காணப்படுகின்றது. இராசேந்திரனால் நிறுவப்பெற்ற இப்பெருநகர் , அவனுக்குப் பின்னும் தொடர்ந்து சோழர் தலைநகராய் விளங்கிய போதிலும் ஏனோ பிற்காலத்தில் சிதைந்து சிற்றூராய் ஆகிவிட்டது.

கங்கைகொண்ட சோழேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது கருவூர்த்தேவர் பதிகம் ஒன்று பாடியுள்