பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

123


டுள்ள பொற்றகடு 2926 1/2, கழஞ்சு எடையுள்ளது. இக்கோவிலின் வெளிச்சுற்றிலுள்ள நந்தி நம் கண்களுக்கு ஓர் நல்விருந்தாகும். இது ஒரே கல்லில் செய்யப்பட்டது. இதன் உயரம் 12 அடி; நீளம் 191 அடி; அகலம் 84 அடி. இக்கோவிற் சுவர்களில் காணும் ஓவியங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரது வரலாற்றினை விளக்கும் ஓவியங்கள் உயிரோவியங்களாகும். சோழ மன்னனும், அவன்றன் அரசியல் அதிகாரிகளும், வழித்தோன்றல்களும் இப்பெரிய கோவிலுக்குப் பொன்னும் மணியும் வாரிவாரி வழங்கினர். ஊர்கள் பல இறையிலியாகக் கொடுக்கப்பட்டன. எனவே பெருவிழாக்கள் நடந்தன. மக்கள் பக்தி வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர். இக்கோவிலைப் பற்றியும் கருவூர்த் தேவர் பதிகம் ஒன்று பாடியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரமும், தஞ்சையும் தவிர பழையாறை என்ற நகர், பல்லவர்க்குச் சோழர் சிற்றரசராயிருந்த காலத்தில் சோழர் உறைந்த பெருநகராகும். மேலும் பிற்காலச் சோழர் காலத்தில் இந்நகர் இரண்டாவது தலை நகராகவும் விளங்கியது.

சோழர் காலக் கல்லூரிகள்

எண்ணாயிரம், திருமுக்கூடல், தஞ்சை, குடந்தை, புன்னைவாயில், திருவொற்றியூர் போன்ற இடங்களில் விளங்கிய கல்லூரிகள் கலையையும், கல்வி நலத்தையும் வளர்த்தன. எண்ணாயிரம் என்னும் ஊர் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்தது. இவ்வூர்க் கோவிலில் 11-ம் நூற்றாண்டில் வட மொழிக் கல்லூரி ஒன்று சிறந்த நிலையில் விளங்கியது. இக்கல்லூரி மாணவர்கள் அங்கேயே தங்கிப் படித்தனர். இக்கல்லூரி அவ்வூர்ச் சபையாரின் ஆதரவில் நடந்தது. 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். பெருமளவு நிலம் இக்கல்லூரிக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டி