பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தமிழ் நாடும் மொழியும்


தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். இரண்டாம் வீரப்பன் காலத்தில் திருச்சி தலை நகராக விளங்கியது.

மதுரையை ஆண்ட நாயக்கர்களில் பெரு வீரனாக விளங்கியவன் திருமலை நாயக்கன் ஆவான். இவன் கி. பி. 1623-இல் பட்டமேறினான். திருவனந்தபுரமும், இராமநாதபுரமும் இவன் அரசுக்கு உட்பட்டிருந்தன. கொங்கு நாடும் அடிபணிந்தது. காந்திரவன் என்ற மைசூர் மன்னனும், விசய நகர மன்னன் மூன்றாம் சீரங்கனும் இப்பெருவீரனால் தோற்கடிக்கப்பட்டனர்.

திருமலை பெரு வீரனாக விளங்கியதோடமையாது, சிறந்த கலைஞனாகவும் விளங்கினான். இவன் செய்த கலைத் தொண்டை எவரும் மறந்திட முடியாது. போரில் புலியாக விளங்கிப் புகழ்பெற்றது போலவே, கலைத்துறையிலும் மாபெரும் வெற்றி பெற்றான். இதன் காரணமாய் மதுரை மா மதுரையாயிற்று; பழம் பெரும் மதுரை புதியதொரு கலைக்கூடமாக மாறியது. அவன் கட்டிய விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கூடிய கோவில்கள், மக்கள் மனங்கவர் மண்டபங்கள், பெரிய பெரிய தூண்கள் போன்றவை இன்று அவனது கலைப் பெருமைக்குக் கட்டியங் கூறுகின்றன. அவனால் கட்டப்பட்ட புது மண்டபமும், அழகிய மகாலும் இன்றும் அழியாச் சின்னங்களாய் விளங்குகின்றன. இவற்றுள் புது மண்டபம் கட்டி முடிக்க இருப்பது இலட்சம் ரூபாய் செலவாகியது; இருபத்திரண்டு ஆண்டுகள் அல்லும் பகலும் சிற்பியர் பலர் உழைத்தனர். இக்கலைக் கூடத்தின் இரு பக்கத் தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிலைகள் நம் நாட் டத்தையெல்லாம் ஈர்க்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன. மகாலைக் கட்டுவதற்கு நிறையச் செங்கற்கள் தேவைப்பட்ட காரணத்தால் தோண்டப்பட்ட பள்ளமே பின்னர் அழகிய தெப்பக்குளமாக்கப்பட்டது. இதனை இன்று மக்கள் மாரியம்