பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

141


மன் தெப்பக்குளம் என்றும், வண்டியூர்த் தெப்பக்குளம் என்றும் வழங்குகின்றனர்.

திருமலைக்குப் பின்னர் அவனது பேரன் முதலாம் சொக்க நாதன் பட்டமேறினான். இவன் காலத்தில் திருச்சி தலைநகராய் விளங்கியது. தஞ்சாவூர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகள் மைசூருக்குச் சொந்தமாயின. இவனுக்குப் பின்னர் நான்காம் வீரப்பன் பட்டம் பெற்றான். இவனது மகனே இரண்டாம் சொக்க நாதன். சொக்க நாதன் அரசனான பொழுது வயதிற் சிறுவனாக விளங்கியதால், இவனது பாட்டி மங்கம்மாள் திறம்பட நாட்டை ஆண்டாள். இவளது ஆட்சிக் காலம் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த காலமாகும். தஞ்சையும், திருவாங்கூரும் மங்கம்மாள் ஆட்சியின் கீழ் விளங்கின. ஆனால் கி. பி. 1702-இல் சேதுபதி மன்னன் மங்கம்மாளைப் போரில் வென்று, தனது நாட்டை நாயக்கர் ஆட்சியினின்றும் விடுவித்தான். மேலும் புதுக்கோட்டைப் பகுதியையும் சேதுபதி வென்று தனது மைத்துனன் இரங்கநாதனுக்குச் சொந்தமாக்கினான்.

கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தை ஓர் பேரிருள் விழுங்கக் காத்திருந்தது. அந்தப் பேரிருளினின்றும் தமிழகத்தைக் காத்தவர் நாயக்கரே. அஃதாவது அவர் காலத்திலே ஐரோப்பியரும் முகமதியரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தைத் தமதாக்கிக் கொள்ள விரைந்தனர். அக்காலை தமிழகத்தை அவரினின்றும் காத்தவர் நாயக்கரே. அரசியர் மங்கம்மா, மீனாட்சி, ஆகிய இருவர் காலத்திலும், முகமதியர் நமக்குக் கொடுத்த தொல்லைகள் எல்லையற்றன. அக்காலை மங்கம்மாள் தளவாய் நரசப்பையன் உதவியுடன் அம்முகமதியரை முறியடித்தாள்.