பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்தமிழ்

175


போலும் அவை உள்ளன. இன்று அந்தப் பண்ணை அறிவாரும் இல்லை; அறிந்து பாடுவாரும் இல்லை. தேவார இசையின் சிறப்பை அறிந்த சாரங்க தேவன் என்பான் வட மொழியில் சங்கீத ரத்னகரம் என்று தான் எழுதிய நூலில் தேவார இசைகளையே வடமொழிப் பெயர்களால் பெரிதும் விரித்து எழுதியுள்ளான். இவன் காலம் கி. பி. 1300. இவன் தெளலதாபாத் தேவகிரி அரசன் சிம்மணர் அவையில் புலவகை இருந்தவன்.

தேவாரத் தமிழிசையே இன்று கர்னாடக இசைக்கு உயிராகவும் கருவாகவும் அமைந்துள்ளது என்று சி. ஆர். சீனிவாச அய்யங்கார், இசைச் செல்வர் இலக்குமணப்பிள்ளை, எம். எஸ். இராமசாமி ஐயர் ஆகிய இசைப் புலவர்கள் கூறியுள்ளனர். தேவார நாயன்மார்கள், திவ்யப் பிரபந்த ஆழ்வார்கள் ஆகியோர் காலத்திற்குப் பின்னர் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது இசைத் தமிழ்ப் புலவர்கள் தோன்றி இசைத் தமிழை வளர்த்தனர். இவர்களுக்குப் பின்பு கி. பி. 13, 14, 15, 16-ஆம் நூற்ருண்டுகளிலே முசுலீம்களும், நாயக்கர்களும், மராட்டியரும் தமிழ் நாட்டை ஆண்டதால் தமிழிசையும் இசை நூல்களும் தாயற்ற சேய்களாயின; தவித்தன; பல உயிர் விட்டன. என்ருலும் இசைத்தமிழ்க் குழவிக்கு அவ்வப்போது செவிலித் தாயர் தோன்ருமல் இல்லை.

கி. பி. 1500-இல் அருணகிரி நாதர் தோன்றினர். திருப் புகழ் என்னும் இசைத்தமிழ் மழை தமிழகத்திலே பொழிந்தது: இடைவிடாது பொழிந்தது. இவருக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழிசையைத் தனிப்பட்ட முறையிலே வளர்க்கவில்லை. பிற மொழி இசையோடு கலந்தே வளர்த்தனர். தமிழிசையும் ஆரிய இசையும் கலந்து கர்டைக இசை பிறந்தது. ஆரிய