பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தமிழ்நாடும் மொழியும்


களையும், பல அரிய இலக்கணக் குறிப்புகளையும் நுட்பங்களையும் இந்நூல் கூறுகிறது. இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கத்திற்கு மறுப்பு நூலாக கி. பி. 18 - ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரால் எழுதப்பட்டதாகும்.

நேமிநாதம், முத்துவீரியம்

நேமிநாதமே சின்னூல் ஆகும். இது வெண்பாவால் ஆயது; எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் இவற்றைக் கூறுகிறது. இந்நூலாசிரியரது பெயர் குணவீர பண்டிதராகும். இவர் காலம் கி. பி. 12- ஆம் நூற்ருண்டு. முத்துவீரியம் என்பது முத்துவீர ஆச்சாரியால் இயற்றப்பட்ட மற்ருெரு இலக்கண நூலாகும்.

மறைந்த நூல்கள்

அகத்தியம், பன்னிரு படலம், அவிநயம் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் முற்றிலும் கிடைக்கப்பெருத நூல்களாகும். இவற்றுள் அகத்தியம் என்பது அகத்திய முனிவரால் எழுதப்பட்டது என்பர். இந்நூல் இன்று முற்றிலும் கிடைக்கப்பெற்றிலது. உரையாசிரியர்களால் ஆங்காங்கே மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்ட சூத்திரங்களே நமக்கு இன்று கிடைத்துள்ளன. இந்நூலினது காலம் முதற் சங்க காலம் அல்லது இடைச் சங்க காலம் என்பர். பன்னிரு படலம் என்பது அகத்தியருடைய மாணவர் பன்னிருவரால் பாடப்பெற்ற பாடல்களைக்கொண்ட புறப்பொருள் இலக் கணம் கூறும் நூல் என்று கூறப்படுகின்றது. அவிநயம் என்னும் நூல் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் அவிநயனர் ஆவார். இவை தவிர கி. பி. 10-ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த காக்கைபாடினியார் என்பவரால் இயற்றப்பட்ட காக்கை-