பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/73

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
தமிழ் நாடும் மொழியும்
 

ஆந்திரப் பேரரசி ஒரு கல்வெட்டிலே, பல்லவரும், சாகரும் தன் மகனாகிய கௌதமபுத்திர சதகர்ணியால் தோற்கடிக்கப்பட்டனர் எனக் கூறியிருக்கிறாள்.

மேலே குறிக்கப்பட்ட குறிப்புகள் மூலம், பல்லவர் சதகர்ணியிடம் தோற்ற பின்பு தொண்டை மண்டலத்திற் குடியேறித் தொடக்கத்தில் ஆந்திரப் பேரரசின் சார்பாளராக (பிரதிநிதி) இருந்திருக்க வேண்டும் என்றும், பின்பு ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலை அவர்கள் காஞ்சியில் முடிசூடி கி. பி. 250-இல் விடுதலைப் பண் பாடியிருக்க வேண்டும் என்றும் வாதிக்கப்படுகின்றது. டாக்டர் கிருட்டிணசாமி அய்யங்கார் போன்ற இந்தியப் பேராசிரியர்கள் பலர் பல்லவர் இந்த நாட்டினரே என எண்ணுகின்றனர். மொழிநூல் விதிப்படி பார்த்தியன் என்ற சொல் ஒருக்காலும் பல்லவன் என ஆகமுடியாது; எனவே பல்லவர்கள் இந்திய மக்களே எனக் கருதுகின்றனர் அவர்கள். பல்லவர் என்போர் அசுவத்தாமன் - நாக கன்னிகை ஆகியோரின் வழித் தோன்றல்கள் என்றும், அவர்கள் பாரத்வாச கோத்திரச் சத்திரியர்கள் என்றும், சில பல்லவர்கள் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சில கல்வெட்டுக்கள் அசுவத்தாமனை விடுத்து சிவனைக் குறிக்கின்றன. பிறந்த உடனே பல்லவம் (கொடி) மீது குழந்தையைப் படுக்கவைத்த காரணத்தினாலும், அக்குழந்தையின் வழித்தோன்றல்களாக விளங்கிய காரணத்தினாலும் பல்லவர்க்கு அப்பெயர் ஏற்பட்டதென்று ஒருசிலர் கூறுவர். புதுக்கோட்டை மன்னர் தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய கள்ளர் குலத்தலைவர். மற்றும் வெள்ளாள மரபினருள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது