பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்ததாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்ற கருத்துக் கொண்ட கதைகளும் புராணங்களும் மிகுந்திருந்ததாலும் 'கீழ்ச்சாதியார்' பிராமணர்களது சிறப்பைத் தாக்குவதன் மூலமும் அவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலை நாட்டிக்கொள்ள முயன்றனர்.4

இந்நூல்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம். வேளாளர் உயர்வைக் கூறும் நூலொன்று 'வருண சிந்தாமணி' என்ற தலைப்போடு 1901இல் வெளியாயிற்று.5 இந்நூலாசிரியர் வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள் முதலியவற்றை ‘ஆரியவேதம்’ என்றும் திருக்குறள், சைவத் திருமுறைகள் முதலியவற்றைத் 'திராவிட வேதம்' என்றும் கூறுகிறார். வேதங்களிலும் திராவிட வேதத்திலும் சாதிப் பிரிவினைகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஆதாரமில்லை என்று குறிப்பிடுகிறார்.


வேதமுண்டான காலத்தில் ஆரியர்கள் ஏற்பாட்டில் சாதி என்பதே கிடையாது. வேதத்தில் சாதியின் குளறு. பாட்டிற்கு ஆதரவேயில்லை. அந்தணர்களை மேன்மைப்படுத்தியதற்கும் சூத்திரர்களைக் கீழ்மைப்படுத்தியதற்கும் யாதொரு ஆதரவுமில்லை. சகல வருணத்தாருக்கும் ஒன்று சேர்ந்திருக்கவும் ஒன்றாயிருந்துண்ணவும் ஒருவருக்கொருவர் கொண்டு கொடுத்திருப்பதற்கும் வேதத்துள் யாதொரு தடையும் தோற்றவில்லை.
வேத சூக்தங்களில் பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய இந்நால்வரும் ஒருவரைப் போலவே பிரமாவினிடத்து உதித்தவர்களாகவேயிருக்கிறார்கள். இதுவும் வேதத்தில் பூர்வ பாகத்தில் சேர்ந்ததன்று; பின்னிட்டதாம்.6


இதன் பின்னர் இவ்வாசிரியர் சைவசமயத் தத்துவத்தை விளக்கி அதைப் பின்பற்றும் சைவர், ஆரிய வேதத்தைப் பின் பற்றும் பிராமணருக்கு மேலானவர் என்று கூறுகிறார். ஆனால், பிற்பகுதியில் நால்வருணப் பிரிவை ஏற்றுக்கொண்டு வேளாளர்கள் தாம் செய்யும் தொழிலால் வைசியர் என்றும் அவர்களுக்கு ஏவல் புரியும் “வண்ணார், நாவிதர், குயவன்,, தேவதாசி மக்கள், வேடன், பக்கிலியன்”7 போன்ற பற்பல தொழிலாளிகள் சூத்திரர்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு வேளாளர்