பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

31

பிறப்பிலும் பஞ்சமுகப்பிரம்மாவிடமிருந்து தோன்றிய ரிஷிகளுக்கும் பஞ்ச கருமார்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையென்று பிராமணர்கள் சொல்லுகிறார்கள். மனுஸ் மிருதியிலும் இவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக மேற்கோள்கள் காட்டுகிறார்கள்.

ஆனால், அதே புராணங்களிலுள்ள ரிஷிமூலக்கதைகளைப் பிராமணரைப் பழிக்கவும் அவர்களுக்குக் குலச்சிறப்பு இல்லை யென்றும் நிரூபிக்கவும் கருமார்கள் பயன்படுத்துகிறார்கள்.

வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அமைப்பைப் பாதுகாக்க வும் எதிர்க்கவும் தோன்றிய இருவிதமான சிந்தனைப் போக்கு களில் முதலாவதைப் பிராமணரும் இரண்டாவதை ஆசாரி யார்களும் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கு பற்றிய தஸ்தாவேசுகளில் காணப்படுவது தவிர, குண்டையன், மார்க்கசகாயம் ஆசாரி சம்வாதத்தில் சில புதிய வாதங்கள் காணப்படுகின்றன.

அவற்றுள் வருணப் பிரிவுகளைப் பற்றியும் அவற்றின் ஒழுக்க முறைகளைப் பற்றியும் நடைபெறும் விவாதத்தின் சாரத்தையும் அவ்விவாதத்தில் எடுத்துக்காட்டப்படும் மேற் கோள்களின் தன்மையையும் சிறிது ஆராய்வோம்.

ஆசாரியர்கள் ஐவர் பஞ்சமுகப் பிரம்மாவினிடமிருந்து தோன்றியதாக யசுர்வேதம் சொல்வதை மார்க்கசகாயம் ஆசாரி முதலியோர் தமது பிராதில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தோம். இவர்களின் தொழில்களின் சிறப்பைப் பற்றியும் அத்தஸ்தாவேசில் சொல்லியிருக்கிறார்கள். சம்வாதத்தில்’ இவர்களது தொழில்களே தெய்வங்களின் தொழில்களென்று மார்க்கசகாயம் ஆசாரி சொல்லுகிறார். அதற்கு யசுர்வேதத்தி லிருந்து மேற்கோள் காட்டுகிறார்.

மதுப் பிரம்மாவின் சிருஷ்டியே உமாமஹேஸ்வரராகிய உருத்திரன் தொழில். மயப்பிரம்மாவினுடைய சிருஷ்டியே நாராயண ஸ்வரூபமாகிய விஷ்ணு தொழில். துவஷ்டப் பிரம்மாவினுடைய சிருஷ்டியே ஸ்ரீ ஹிரண்ய கர்ப்பனாகிய பிரம்மாவின் தொழில், சில்பப் பிரம்மாவினுடைய தொழிலே தேவேந்திரன் தொழில். விஸ்வக்ஞப் பிரம்மா வின் தொழிலே சவிதா பாஸ்கரனாகிய சூரியன் தொழில்.

இங்கு பிரம்மாவும் வேறு வேதக் கடவுளரும் தொழில் செய் வோர் என்று மா.ச. ஆசாரி கூறுவதைக் காணலாம். இத் தொழில்களைச் செய்யாத, ஏன் எத்தொழிலுமே செய்யாத பிராமணர்கள், தொழில், செய்யும் கடிவுளர்களின் வம்சத்தா ரல்லர் என்று காட்டுவதே அவரது நோக்கம்