பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

சூத்திரருக்கு, உயர் வருணத்தினர் மூவருக்கும் அடிமைத் தொழில் செய்வதே சுயதர்மம் என்று மனுஸ்மிருதி விதிக்கிறது. அவர்களுக்கு ஞானம் பெறும் உரிமை கிடையாது. வேதத்தைப் பாராயணம் செய்யும் உரிமையோ, காதால் கேட்கும், உரிமையோ இல்லை.

ஆனால் ஒவ்வொரு வருணத்தின் விதியைப் பற்றிக் குண்டையன் வினவும் பொழுது, சூத்திரரைப் பற்றி மா.ச. ஆசாரி இவ்வாறு கூறுகிறார்:

சூத்திரரது விதியாவது: ஆதியில் விஸ்வப் பிரம்ம வம்சத்தார் இப்பூச் சக்கரத்தை (பூமியை) குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதமென்னும் பஞ்ச நிலமாகப் பகுத் தனித்து இன்ன காலத்தில் இன்ன பொருள் விளையு மென்றும், அதனை இந்த விதமாய்ப் பயிரிட வேண்டு மென்றும், கற்பித்த படியே உயிர்களைக் காப்பாற்றுவது சூத்திரன் பெருமை யாகையால் அந்தச் சூத்திரன் தேவர் கள் முதலாகிய பிதுர்க்கள் யாவருக்கும் நித்தியநைத்திய உணவுகளைத் தருபவன். வேதாகமங்களுணர்ந்த விதி வழுவாதவனே சூத்திரனாவான்.


பின்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் சூத்திரருக்கும் வேத அத்யயனம் செய்யும் உரிமையுண்டு என்று கூறுகிறார், இவ்வாறு கூறுவதன் மூலம் எல்லா வருணங்களும் சாதிகளும் சமமென்று வாதிக்கிறார்.

புராணங்களே வருண உயர்வு தாழ்வுகளை ஆதரித்து வாதாடுவதால், மா.ச. ஆசாரி புராணங்களின் பல மாறுபாடு களை எடுத்துக்காட்டி எல்லாப் புராணங்களுமே பொய் யென்று கூறுகிறார். பல புராணக் கதைகளைச் சொல்லி அவற்றின் முரண்பாடுகளைக் காட்டிய பின் மா.ச. ஆசாரியார் சொல்லுவதாவது:

ஆனால் பாகவதம் முதலிய புராணங்களில் விஷ்ணு வின் நாபிகமலத்தில் பிரம்மா உற்பத்தியானாரென்றும் வேறு சில நூல்கள் கமலத்தில் ஆதிசக்தி உண்டாகிய ஒரு விதத்தில் விஷ்ணுவின் பிதாவாகிய சிவன் உண்டானா னென்றும் மச்ச புராணத்தில் ருத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டானென்றும், நாரதீய புராணத்தில் நாராயணனுடைய வலப்புறத்தில் பிரம்மாவும், இடப் புறத்தில் விஷ்ணுவும் மத்தியத்தில் சிவனும் தோன்றினார் களென்றும் லிங்கபுராணத்தில் பிராம்மாண்டத்தில் ருத்திரன் ரூபிகரமாய்த் தோன்றித் தனது இடதுபுறத்தில்