பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

35

இடங்கைப் பிரிவில் அடங்கிய 95 வகைச் சாதியார்களுக் கும் இழைத்த அநீதிகளைக் கூறுகிறது. இதே போல இடங்கை வகுப்பினர் அக்காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுக்கள் நாட்டின் பல பாகங்களிலும் அகப்படுகிறது. மைசூர் ஆவணியிலிருந்து கிடைத்த கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக்கிணங்கக் கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத் தில் 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவற்றிற்கு வரி விதிக்கப்பட்டதில்லையென்றும் அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டாமெனவும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதங்களையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள்.

முதற் குலோத்துங்க சோழன் காலச் சாசனம் இடங்கை வலங்கை கலகமொன்று இராஜமகேந்திரச் சதுர்வேதி மங்க லத்தில் நடந்ததாகக் கூறுகிறது. இம்மன்னனுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் வலங்கை-இடங்கை சமூகத்தார் களிடையே ஒரு கலகம் நடந்தது. அதிலே கிராமம் முழுதும் சுட்டெரிக்கப்பட்டது. கோயில் பண்டாரமும் கோயில் விக்கிரகங்களும் சூறையாடப்பட்டன. அவர்களுடைய கொள் ளைக்குத் தப்பிய பொருள்களைக் கோயிலிலே பாதுகாக்க முடியவில்லை. இக்கலகங்களைக் குறித்து தி.நா.சு. குறிப்பிடு வது வருமாறு:

இடங்கையாருக்கும் வலங்கையாருக்கும் நெடுநாளாக விரோதம் இருந்தது. இந்தச் சண்டைகள் சமூக வாழ்க்கை யில் அவரவர்களுக்குள்ள சில உரிமைகளைப் பற்றியன வாகவே இருந்தன. சில சமயங்களில் சமாதானம் நிலவி ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை எந்த உரிமையை எந்த வகுப்பார் அனுபவிப்பது என்பது பற்றியே இருக்கின்றன.

சில சாசனங்கள் வலங்கைச் சாதிகள் சிலவற்றையும் இடங்கைச் சாதிகள் சிலவற்றையும் குறிப்பிட்டுப் பட்டியல் கொடுக்கின்றன. அவற்றைக் கவனித்தால் வலங்கையர் நன் செய் அல்லது புன்செய் நிலத் தொடர்புடையராகவும் இடங் கையர் வணிகம் அல்லது கைத்தொழில்களோடு தொடர்புடை