பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

39

இவ்விரு கட்சிகளுடனும் சேராது வேளாளர்கள் பொதுவாகவே இருந்திருக்கிறார்கள். அங்ங்னமாயின் வேளாளரை வலங்கையென வழங்கி வருகிறதேயெனின், கவரை முதலியோரும் வேளாளருக்காகவே வலங்கையிற் சேர்ந்தமையின் வலங்கைக் கட்சியார் இவ்வேளாளரையும் தங்கள் கட்சியில் சேர்ந்தவரென்று கூறுவர். அங்ங்ன மிருப்ப கம்மாளர் வேளாளரின் மேலே தீராப் பகையுடைய வராய் உழவுத் தொழிற்குரிய கொழு முதலிய கருவிகளை நாம் செய்து கொடுப்பதனாலன்றோ இவர்கள் நம்மை அடக்கியாள வந்திருக்கிறார்கள்! இவர்கள் அதிகாரத்தை பார்ப்போமென்று தாங்கள் தொழிலைச் செய்யாமல் இறுமாப்படைந்திருந்தனர். கி ராம த் தார் உழவுத் தொழில் செய்ய முடியாமல் குடியரசாயுள்ள முதன்மை யாருக்குத் தெரிவித்தவுடனே அவர் இக்கம்மாளர்களைப் பிடித்துச் சிறையிலிட்டு ஒறுத்தனர். உடனே அக்கம் மாளரின் பெண்டுகள் வந்து உழவிற்கு வேண்டிய கருவி களை நாங்கள் செய்து தருகிறோம், எங்கள் புருஷர்களை ஒறுக்காதிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அப்படியே அநேக நாள் கம்மாளப் பெண்டுகள் உழவிற் குரிய ஆயுதங்களை செய்து கொடுத்து வந்தார்கள். கம்மாளர்கள் புருஷர்கள் இடங்கையிலிருந்தும் அவர்களது பெண்டுகள் வலங்கையில் சேர்ந்திருந்தார்கள். அநேக நாள் வரை கம்மாளர்கள் சிறையினின்றும் நீங்க முடியா மையால் முதன்மையாரை இனி வழக்கப்படி எங்கள் தொழிலைச் செய்து வருகிறோம். எங்கள் குற்றத்தைப் பொறுத்துக் காவிலினின்றும் விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் சிறையினின்றும் நீக்கப்பட்டு வழக்கம் போல் வேலையை நடத்தி வந்தார்கள். இக்கம்மாளர் களைப் போலவே ஏனைய குடிமக்களும் தத்தத் தொழில் தடைபடாது நடத்தி வந்தமையால், மநு நீதி தவறாமல் குடியரசு அநேக நாள் வரையும் நடத்தப்பட்டு வந்தது. நாடும் வளப்பட்டு வந்தது.

இப்பரம்பரைக் கதை வேளாளர்களால் தங்கள் சிறப்பைக் கூற எழுதப்பட்டது. ஆதலால் தங்கள் உயர்வையும் சிறப்பை யும் இக்கதையில் மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள் என்பது உண்மை. இக்கதையில் வரலாற்றுண்மைகளாகச் சொல்லப் படும் பல நிகழ்ச்சிகளுக்குச் சாசனச் சான்றுகளோ, வேறு சாதி களில் வழங்கும் நாட்டுக் கதைகளில், சான்றுகளோ இல்லை. எடுத்துக்காட்டாக இக்கதை நடப்பதாகச் சொல்லப்படும்