பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

22 பஞ்சப்பிரம்மாக்களின் உற்பத்தி பற்றி யசுர்வேதம் கூறுகிறது. படைப்புச் சக்தியை விஸ்வப்பிரம்மா என்றும் அதன் ஐந்து வித வெளிப்பாடுகளான தொழில்கள் பஞ்ச முகப் பிரம்மாவென்றும் தனித்தனியாக அத்தொழில்களின் அதிதேவதைகளாக ரிஷிகள் தோன்றினார்களென்றும் யசுர் வேதக் கதை சொல்லுகிறது. அத்தொழில்களைப் பரம்பரையாகச் செய்துவரும் பஞ்சகருமார்களே இவ்வைந்து -- ரிஷிகளின் வழித்தோன்றல்கள் என்பது அவர்களது வாதம். தாங்கள் சுத்த ரிஷிகளின் வம்சம் என்றும் பிராமணர் சங்கர சாதியினர் என்பதும் அவர்கள் கூற்று. சங்கர சாதியாரென்றால் கலப்பு கலப்புச் சாதியார் என்பது பொருள் பிராமணரைவிட உயர்ந்த குலத்தவர் என்பது அவர்களுடைய வாதம்.
23 இரும்பு, செம்பு, கல், மரம் முதலிய பொருள்களைப் பயன்படுத்திச் செய்யும் தொழில்கள் இழிவான (நித்கிருஷ்டமான) தொழில்கள் என்று குண்டையன் கூறினார். வாதிகளோ, படைப்புத் தொழிலும் காப்புத் தொழிலும் இத்தொழில்களின் அடிப்படையில்தான் நடைபெறுவதாகவும் கருவிகளும் ஆயுதங்களுமே உலக வாழ்க்கைக்கும் அரசு நிலைப்பதற்கும் அடிப்படையென்றும் மா. ச. ஆசாரி வாதாடுகிறார். தங்களது தொழில்களால் உலகம் இயங்குவதால் தங்கள் தொழில்கள் படைப்புக் கடவுளான பிரம்மாவின் தொழிலுக்கும் காத்தல் கடவுளான திருமாலின் தொழிலுக்கும் சமமானவை என்று சொல்லுகிறார்கள்.
24 இக்கதைகள், மணிமேகலையில் ஒரு பகுதியும் கபிலரகவலில் மற்றோர் பகுதியும் காணப்படுகின்றன.
25 இப்பகுதியில் காணப்படும் யசுர்வேத மொழிபெயர்ப்பு வருணாசிந்தாமணியில் காணப்படுவது.
26 தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், தி. நா. சு. முகவுரை.
27 சோழன் பூர்வ பட்டயம், Oriental Manuscripts Library Series.
பேராசிரியர் கே. கே. பிள்ளை தமது தென்னிந்திய வர லாற்றில் இடங்கைச் சாதிகளுக்குக் கிடைத்த சில சலுகை களைப் பற்றி மேற்கண்ட பட்டயத்தைச் சான்று காட்டி எழுதுவதாவது:
கம்மாளர்களுக்கு அரசர் வழங்கிய உரிமைகளைப் பற்றி ஒரு கல்வெட்டுக் கூறும் செய்தியின் பிரதிகள் கரூர், பேரூர், மொடக்கூர் ஆகிய இடங்களில் காண