பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

5



தமிழ்நாட்டின் வழிமரபுப்படி பேராசிரியர் நா. வா. அவர்களின் அறுபதாம் ஆண்டு மணிவிழாவினையொட்டி (1978) அவரைப் பற்றிய மலர் வெளியிடுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததால், மாற்றாக பல்வேறு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று வெளியிட முடிவு செய்யப்பட்டது. அப்போது, மக்கள் வெளியீடு நிறுவனத்தின் சார்பில் பேராசிரியர் அவர்களுடைய கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்துப் பத்து நூல்களாக வெளியிடலாம் என்ற என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். பேராசிரியர் அவர்கள் பல்வேறு ஏடுகளில் எழுதிய கட்டுரைகளை முழுமையாகக் கொண்ட தொகுப்பு நூல்களாக இல்லாமல், குறிப்பிட்ட சில கட்டுரைகளை மட்டுமே கொண்ட பத்து நூல்கள் வெளியிடுவதே அப்போதைய திட்டம். கட்டுரைகளும் தலைப்புகளும் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.

ஆயினும், சில பழைய ஏடுகள் கிடைக்காமையாலும் வழக்கமான வெளியீட்டுச் சிக்கல்கள் ஏற்படுத்திய தாமதத்தாலும் நான்கு நூல்கள் மட்டுமே வெளிவந்தன.

எனது ஆர்வத்தைக் குறைக்காமல் இருக்கவும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கவும் “நூல்கள் வரவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, அறுபதாம் ஆண்டில்தான் வரவேண்டும் என்பது இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வரட்டும்” என்று பேராசிரியர் அவர்கள் அடிக்கடி கூறியிருக்கிறார்.

மார்க்சீய அழகியல் (1978 நூலுக்கு எழுதிய முன்னுரையில்,

இலக்கியம், வரலாற்று ஆராய்ச்சி, சமூகவியல் ஆராய்ச்சி ஆகியவற்றிலெல்லாம் ஆர்வம் கொண்டுள்ள டாக்டர் மே. து. ராசுகுமார் இந்நூலையும் இன்னும் ஏழெட்டு நூல்களையும் வெளியிடப்போவதாக அறிவித் துள்ளான். மகனுக்கு நன்றி சொல்வது மரபல்ல என்றாலும், மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்வது அவன் செயல் களை ஊக்குவிக்குமல்லவா?

என்னால் எவ்வளவு சுமக்க முடியுமோ அதற்குமேல் தூக்கி வைத்துக் கொள்கிறேன் என்பது அவருக்குத் தெரிந்தும், ஒர் இளைஞனைச் சோர்வடையச் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறெல்லாம் எழுதினார்.

ஆனால், பேராசிரியர் அவர்களுடைய முழுமையான தொகுப்பினை வெளியிடவேண்டிய நிலை அடுத்துவரும் என்று நாங்கள் யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை.

அவரது மறைவுக்குப் பிறகு அவர் எழுதிய அனைத்தையும் முழுமையான தொகுப்பாகத் துறையடிப்படையில் வெளியிடு-